பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர் (Post Doctoral Fellowship) போன்ற இளம் வல்லூநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தொல்குடி புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்களின் வாழ்வு, வளர்ச்சி, உரிமை, கலாச்சாரம், சமூகம், சவால்கள், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு உதவிடும் வகையில் தொல் குடியினர் புத்தாய்வு திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் 70 மாணாக்கருக்கு கீழ்காணும் உதவித்தொகைகளை (Fellowship) வழங்கவும் பழங்குடியின நல இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பாடப்பிரிவு எண்ணிக்கை உதவித்தொகை (Fellowship) கால அளவு இளங்கலை மற்றும் முதுகலை 25 10,000/- 6 மாதம்(இறுதியாண்டில் பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணாக்கருக்கு) முனைவர் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர் 45 25,000/- 3 வருடம் மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு