அடிப்படை தகுதி

ஒன்பதாவது அல்லது பத்தாம் வகுப்பு மாணவர்களாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வளர்ச்சி வட்டத்திலும் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பிற்கு மேல் முதுநிலை பட்டப்படிப்பு வரை:

அறிவியல், வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்திற்கு அதிகமாக, இலக்கியம் மற்றும் கலை பாடங்களில் 55 சதவீத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வேறு எந்த சிறந்த மாணவர்களுக்கான உதவித்தொகையும் பெற்றிருக்கக் கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

எண்ணிக்கை

ஒன்பதாவது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்: ஒவ்வொரு வளர்ச்சி வட்டத்திற்கு இரண்டு ஸ்காலர்ஷிப் வீதம் அதிகபட்சமாக 5381 வளர்ச்சி வட்டங்கள்.

பத்தாம் வகுப்பிற்கு மேல் முதுநிலை பட்டப்படிப்பு வரை: 17 ஆயிரம் (ஆண்டிற்கு ஆண்டு வேறுபடும்)

தேர்வு முறை

ஒன்பதாவது மற்றும் பத்தாம் வகுப்பு:

வளர்ச்சி வட்டார அடிப்படையிலான எட்டாம் வகுப்பு தேர்வு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில்.

பிளஸ் 2

மாநில அளவிலான பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வு தரவரிசைப்பட்டியல் அடிப்படையில்.

இளநிலை பட்டப்படிப்பு

மாநில அளவிலான பிளஸ் 2 தேர்வு தரவரிசைப்பட்டியல் அடிப்படையில்.

முதுநிலை பட்டப்படிப்பு

மாநில அளவிலான இளநிலைபட்டப்படிப்பு தேர்வு தரவரிசைப்பட்டியல் அடிப்படையில்.

ஆதாரம் : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்