மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்

பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவியருக்கு மும்பை, கே.சி., மஹிந்திரா எஜுகேஷன் டிரஸ்டு நிறுவனம் உதவித்தொகை அறிவித்துள்ளது.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு, உடல் ஊனமுற்றக் குழந்தைகளுக்கு, ராணுவத்தில் பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

முகவரி: ரீஜினல் மேனேஜர் - எஸ்எஸ்பியு மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மஹிந்திரா டவர்ஸ், பட்டுல்லாஸ் ரோடு, சென்னை - 600 002. www.mahindra.com