மேலாண்மை படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மவர்களிடம் அதிகம். எனவே, எம்.பி.ஏ., படிப்பிற்கு வெளிநாடுகளில் எந்த மாதிரியான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.

THE LONDON BUSINESS SCHOOL WOMEN SCHOLARSHIP

வெளிநாட்டில் MBA படிக்க விரும்பும் தகுதியுள்ள மகளிருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிரிட்டனிலுள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது.

மதிப்பு - முதல் வருட கட்டணம் இதில் அடங்கும்.

விபரங்களுக்கு www.london.edu/programmes/mba/scholarships.html

SGU COMMONWEALTH JUBILEE SCHOLARSHIP PROGRAMME

பிரிட்டனிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலையில் முதுநிலை மேலாண்மை படிப்பை மேற்கொள்ள விரும்பும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 60 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

செயின்ட் ஜார்ஜ் பல்கலை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

மதிப்பு - ஒட்டுமொத்த கல்விக் கட்டணமும் அடங்கும்.

விபரங்களுக்கு www.sgu.edu/financial-services/grad-scholarships.html

THE DISTINGUISHED FELLOWS PROGRAMME

சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் பெல்லோஷிப், அக்கல்வி நிறுவனத்தில் பயிலும் திறன்வாய்ந்த மாணவர்களுக்காக வழங்கப்படுகிறது.

சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிறுவனத்தால் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மதிப்பு - 2 ஆண்டுகளுக்கான முழுநேர கல்விக் கட்டணம் மற்றும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 20,000 டாலர்கள் உதவித்தொகை உள்ளிட்டவை இதில் அடங்கும்.

விபரங்களுக்கு www.student.chicagobooth.edu/group/distinguished fellow/index.html

STIRLING MASTER OF BUSINESS ADMINISTRATION (MBA) SCHOLARSHIP

பிரிட்டனின் ஸ்டிர்லிங் பல்கலையில் முழுநேர எம்.பி.ஏ., படிக்கும் நபர்களுக்காக, 2 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

மதிப்பு - கல்விக் கட்டணத்திலிருந்து, 7,700 பிரிட்டன் பவுண்டுகள் தள்ளுபடி செய்யப்படும்.

விபரங்களுக்கு www.stir.ac.uk/postgraduate/financial-information/scholarships

FORTE FELLOWSHIP

அமெரிக்காவின் எம்.ஐ.டி., சோலன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில், மேலாண்மை படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற, மாணவிகள் சிறப்பான தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த வேண்டும்.

MIT சோலன் கல்வி நிறுவனம் இதை வழங்குகிறது.

மதிப்பு - கல்விக் கட்டணத்தில் பாதியளவு தொகை தள்ளுபடி செய்யப்படுவதோடு, மாணவர்களின் தேவைக்கேற்ப 1,000 அமெரிக்க டாலர்கள் முதல் 5,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படும்.

விபரங்களுக்கு www.fortefoundation.org/site/PageServer?pagename=why_fellows

ஆதாரம் : தினமலர்