இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)

1970-ஆம் ஆண்டு இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் கவுன்சில் சட்டத்தின்படி இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சென்டரல் கவுன்சில் ஆஃப் இந்தியன் மெடிசின்) உருவாக்கப்பட்டது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யூனானி போன்ற இந்திய மருத்துவக் கல்வி முறைகளின் தரத்தை நிர்ணயம் செய்வது இந்த அமைப்பின் பணியாகும். மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்தல், இந்திய மருத்துவமுறை மருத்துவர்களுக்கான நடத்தை விதிகளை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்திய மருத்துவ முறைக் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் இதன் முக்கியப் பணியாகும்.

மேலும் விவரங்களுக்கு www.ccimindia.org