இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)

வேளாண் துறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவதற்கான தலைமை அமைப்பாக உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவராக மத்திய வேளாண் துறை அமைச்சர் இருக்கிறார்.

38 வேளாண் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் 26 ஆயிரம் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் (காஷ்மீர், ஆந்திரம் நீங்கலாக) மற்ற மாநிலங்களில் உள்ள வேளாண் கல்வி நிலையங்களில் உள்ள 15 சதவீத இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை ஐசிஏஆர் நடத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு www.icar.org.in