பல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ)

பல் மருத்துவக் கல்வியையும் பல் மருத்துவத் தொழிலையும் ஒழுங்குபடுத்துவதற்காக பல் மருத்துவக் கவுன்சில் (டென்டல் கவுன்சில் ஆஃப் இந்தியா) தொடங்கப்பட்டது.

1948-ஆம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்தக் கவுன்சிலுக்கான திருத்தச் சட்டம் 1992-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

புதிய பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பதும் ஏற்கெனவே உள்ள பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல் மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிப்பதும் பல் மருத்துவக் கவுன்சிலின் முக்கியப் பணிகளாகும்.

பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு http://www.dciindia.org.in/