பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப் படுத்துவதிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்குவது வரை பல்வேறு பணிகளை பல்கலைகக்கழக மானியக் குழு மேற்கொண்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே பல்கலைக்கழக மானியக் குழு பாலமாகத் திகழுகிறது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு www.ugc.ac.in