தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

என்.ஐ.ஓ.எஸ். திட்டம்

“நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூல்” என்று அழைக்கப்படும் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம்.

தமிழக அரசு தேர்வுத்துறையில் தனித்தேர்வர்களாக சேர்ந்து இது போன்று தேர்வு எழுதலாம் என்ற போதிலும், என்.ஐ.ஓ.எஸ். திட்டத்தில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தாங்களே தேர்வுசெய்து படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும்.

என்.ஐ.ஓ.எஸ். திட்டத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு முடித்த பிறகு ரெகுலர் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர முடியும். தற்போது நாடு முழுவதும் 19 மண்டல மையங்கள் இயங்குகின்றன.

புதிய தேர்வுமுறை அறிமுகம்

தேசிய திறந்தவெளி கல்வி நிறு வனத்தில் இந்தியா முழுவதும் 26 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் 5.5 லட்சம் பேர் சேருகிறார்கள். கடந்த ஆண்டு இங்கு 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 4 ஆயிரம்பேர் அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி. கல்லூரிகளில் சேர்ந்துள்னர்.

15 பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்

தமிழ்வழி தேர்வு

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படிக்கிறார்கள். இதுவரை பாடத்திட்டங்கள் தமிழ் வழியில் இல்லை. தற்போது பாடத்திட்டம் தமிழ்வழியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்துவிடும். அதன்பிறகு தமிழக மாணவர்கள் தமிழ்வழியிலும் தேர்வெழுதலாம் என்றார்.

ஆதாரம்: தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.)