சை-டெக் ஸ்பின்ஸ் (Sci-Tech Spins) இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தில்லி (ஐஐடி டெல்லி) உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சை-டெக் ஸ்பின்ஸ் (Sci-Tech Spins) என்னும் நிகழ்ச்சியை செப்டம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் கீழ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐஐடி டெல்லி பேராசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை வழங்குவார்கள் மற்றும் ஆய்வக செய்முறைகளை நடத்தி காண்பிப்பார்கள். கண்கவர் உலகில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவைகளைப் பற்றியும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற மர்மங்களைப் பற்றியும் மாணவர்களுடன் கலந்துரையாடி விளக்குவதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்ற நம்பிகையுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மின் சான்றிதழ்கள் ஒன்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் நான்கு பேரை பள்ளிகள் பரிந்துரைக்கலாம். விரிவுரைகளில் கலந்து கொள்ளும் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவர்கள் ஐஐடி டெல்லியின் வருடாந்திர நிகழ்வான ஓபன் ஹவுஸுக்கு (Open House) அழைக்கப்படுவார்கள். பள்ளி மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள சிறந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைக்கும் ஒரு சிறந்த தளமாக இந்நிகழ்ச்சி இருக்கும். நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் சை-டெக் ஸ்பின்ஸ் (Sci-Tech Spins) நிகழ்ச்சிகள் யூடியூபில் (YouTube) நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். Associate Dean, Academic Outreach & New Initiatives, IIT Delhi e-mail: adoni@iitd.ac.in, acadoutreach@iitd.ac.in ஆதாரம்: ஐஐடி டெல்லி