நிபுண் பாரத் திட்டம் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு பெறுவதை 2026-27-க்குள் உறுதி செய்வதற்கான புரிந்து கொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவுக்கான நிபுண் பாரத் திட்டம் மத்திய கல்வி அமைச்சகத்தால் ஜூலை 5, 2021 அன்று தொடங்கப்பட்டது. மத்திய அரசின் சமகிர சிக்ஷாவின் மைய நிதியுதவி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள நிபுண் பாரத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மூன்று முதல் ஒன்பது வயதுக்குள் உள்ள குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதாகும். கல்வி கற்பதை முழுமையான, ஒருங்கிணைந்த, மகிழ்ச்சியான மற்றும் ஈடுபாடு நிறைந்த அனுபவமாக மாற்றுவது நிபுண் பாரத் திட்டத்தின் லட்சியமாகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிபுண் பாரத் திட்டம் வழிகாட்டுதல்கள் விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல் தக்க வைத்துக் கொள்ளவும், ஆசிரியர்கள் திறனை மேம்படுத்தவும், உயர் தரமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியர் வளங்கள் / கற்றல் பொருட்களை வழங்குவதற்கும், ஒவ்வொரு குழந்தையின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் நிபுண் பாரத் திட்டம் வழிவகை செய்யும். ஆதாரம்: மத்திய கல்வி அமைச்சகம்