படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்? படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது. பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாக இருக்க வேண்டும். நல்ல காற்று வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாது. நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பொருட்களைத் தேடுவதற்காக அதிக நேரத்தைச் செலவழிக்காதீர்கள். படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும். குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு வந்து போகும் இடமாக இருக்கக் கூடாது. இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும். ஆதாரம் : தினமணி - கல்வி