தாளகிரீஸ்வரர் ஆலயம் (Talagirisvara Temple) தமிழ்நாட்டிலுள்ள, விழுப்புரம் மாவட்டம், பனமலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில்.

அமைவிடம்

இவ்வாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள பனமலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. பனமலை, செஞ்சியிலிருந்து 23கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

"தாள் " என்ற எழுது பனை மரத்தை குறிக்கும். பனை மரத்தை தலமரமாக கொண்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கைலாசநாதர் கோயில், பனமலை தாளகிரீசுவரர் கோயில் இவ்வரசனால் கட்டப்பட்டைவை.

பல்லவர் கால சுவர் ஓவியம்

எழில் மிகு சோமஸ்கந்தர் தேவியுடன் இருக்கும் ஏழாம் நூற்றாண்டு கலையழகு மிக்க சுவர் ஓவியம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் இந்த ஓவியம் ஒன்று ஆகும்.

ஆதாரம் : ஜெ.பிரபு, புதுச்சேரி