விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக செங்கோட்டையில், ‘மாத்ருபூமி ப்ரொஜெக்க்ஷன் மேப்பிங் ஷோ’ எனப்படும் தாய்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வண்ணமிகு ஒளிக்காட்சி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் ஒரு நிரந்தர அங்கமாக இந்த நிகழ்ச்சி இருக்கப்போவதோடு ஆண்டு முழுவதும் நடைபெறும். ஒளி, ஒலி மற்றும் இசையைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்டமான காட்சியை மாத்ருபூமி வழங்குகிறது. இந்தியாவின் செழுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை அதன் நீண்ட, அற்புதமான வரலாற்றின் மூலம் எடுத்துக்காட்டுவதோடு இது மக்களிடையே தேசபக்தி உணர்வைத் தூண்டுகிறது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்