பின்னணியம் இந்திய அரசியலமைப்பு உருவானதற்கும், அதனை உருவாக்கிய பெருமைமிக்கவர்களின் பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் அரசியல் சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தினை நாம் ஏற்றுக் கொண்ட நாளினை நினைவுகூறும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் சாசன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2022 கொண்டாட்டம் இவ்விழாவினை பொதுமக்கள் பொருத்தமான வகையில் கொண்டாடுவதற்காக இந்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையால் உருவாக்கப்பட்டுள்ள கீழ்காணும் வலைத்தளங்கள் செயல்பட்டு வருகிறது . அரசமைப்பின் முகப்புரை - இணைய வழி மூலம் அரசமைப்பின் முகப்புரையை 23 மொழிகளில் (22 அலுவல் மொழிகள் மற்றும் ஆங்கிலம்) படிக்கலாம். அரசமைப்பு ஜனநாயகம் வினாடிவினா- இணைய வழி மூலம் அரசமைப்பு ஜனநாயகம் தொடர்பான வினாடிவினாவில் பங்கேற்கலாம். பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த இரண்டு வலைத்தளங்களிலும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்