பள்ளிக் குழந்தைகளின் மனத்தில் அறிவியல் கலாச்சாரத்தை ஆழப் பதிய வைப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு (CSIR) ‘பள்ளிக் குழந்தைகளுக்கான புதுமை கண்டுபிடிப்பு விருது' என்னும் போட்டியை நடத்துகிறது. போட்டியின் நோக்கம் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய விழிப்புணர்வு, ஆர்வம் மற்றும் ஊக்கத்தை உருவாக்குதல் அறிவியல் மனப்பான்மை மற்றும் புத்தாக்க ஆர்வத்தை ஆதரித்தல் தகுதி ஜனவரி 1 அன்று 18 வயதுக்குக் கீழே உள்ள பள்ளியில் படிக்கும் இந்திய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் அல்லது குழுவாக உருவாக்கிய கண்டுபிடிப்பை போட்டிக்கு அனுப்ப வேண்டும். கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் இந்தி அல்லது ஆங்கில மொழியில் 5000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தல் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிப்பதற்கான காலம் : ஏப்ரல் மாதம் . பள்ளி முதல்வரின் அங்கீகாரக் கடிதத்துடன் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Head, CSIR-Innovation Protection UnitVigyan Suchana Bhawan14-Satsang Vihar Marg, Special Institutional AreaNew Delhi-110067 மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை ciasc.ipu@niscair.res.in என்ற மின்னஞ்சல் மூலமும் சமர்ப்பிக்கலாம். இத்துடன் பள்ளியின் முதல்வர் / தலைவரால் வழங்கப்பட்ட அங்கீகாரச் சான்றிதழை (முத்திரை மற்றும் தேதியுடன்) ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். விருதுகள் சமுதாயதில் தற்பொழுது நிலவும் பிரச்சனைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இருக்கும் 15 புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு: ரூ. 100000 இரண்டாம் பரிசு: ரூ. 50000 (2 நபருக்கு) மூன்றாம் பரிசு: ரூ. 30000 (3 நபருக்கு) நான்காம் பரிசு: ரூ. 20000 (4 நபருக்கு) ஐந்தாவது பரிசு: ரூ. 10000 (5 நபருக்கு) போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான மாணவர்கள் மற்றும் அவர்களது அறிவியல் ஆசிரியர்கள் ஆகியோருக்கு அறிவுசார் சொத்துரிமை (IPR) பற்றி பயிற்சி அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை www.csir.res.in என்ற வலைத்தளத்தில் பார்க்கவும்.