சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் பகுதியாக, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஸ்வராஜ் - இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விரிவான கதை’ (Swaraj- Bharat Ke Swatantrata Sangram Ki Samagra Gatha) என்ற பெயரில் புதிய வரலாற்று நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 15 ஆம் நூற்றாண்டு முதல் நடக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கதை 75 பகுதிகளாக ஒளிபரப்பானது. பிரபல திரைப்பட நடிகர் மனோஜ் ஜோஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு உயிர் கொடுக்கும், மேலும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டது . 2022 ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்தத் தொடர், பல்வேறு மொழிகளில் அந்தந்த மண்டல தூர்தர்ஷன் அலைவரிசையில் ஒளிபரப்பானது. மேலும், இதன் ஒலி வடிவம் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்