"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற புகழுக்கும் பெருமைக்கும் உரிய தமிழ்நாட்டில் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறள் வாரம் நிகழ்ச்சிகள் திருக்குளின் பெருமையை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் வகையில் குறளாசிரியர் மாநாடு. திருக்குறள் வினாடி வினா, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறள் ஒப்பித்தல் போட்டியில் முதல் 5 இடங்களை பிடிப்போருக்கு தலா ரூ, 5,000, அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 3,000, அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 2,000 ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். யார் பங்கு பெறலாம் மாணவா்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நீங்கலாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்கலாம். இந்த நிகழ்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகிறது. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு மாவட்ட வலைதளங்களைப் பார்க்கவும்