உடலியல் சார்ந்த டி.இ.டி அறிவியல் வினா - விடைகள் * உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருள்களை உணவு என்கிறோம். * உணவில், உடலுக்குத் தேவையான சத்துக்களையே ஊட்டச்சத்துகள் எனக் கூறுகிறோம். * உடலுக்கு ஆற்றல் அளிப்பவை - கார்போஹைட்ரேட்டுகள். கொழுப்பு. * வளர்ச்சியை அளிக்கக் கூடியவை - புரதங்கள் * உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - வைட்டமின்கள் * உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை - தாது உப்புகள் * உணவைக் கடத்தவும், உடல் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துபவை - நீர் * வெள்ளரிக்காயின் நீரின் அளவு - 95 சதவிகதம் * பாலில் நீரின் அளவு - 87 சதவிகதம் * முட்டையில் உள்ள நீரின் அளவு - 73 சதவிகதம் * காளானில் உள்ள நீரின் அளவு - 92 சதவிகதம் * உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு - 75 சதவிகதம் * தர்பூசணியில் உள்ள நீரின் அளவு - 99 சதவிகதம் * ஒரு துண்டு ரொட்டியில் உள்ள நீரின் அளவு - 25 சதவிகதம் * காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றில் உள்ள வைட்டமின் சத்துக்கள் இழக்கப்படுகிறது. * காய்கறிகள், பழங்களின் தோல்களில் அதிகயளவில் வைட்டமின்கள், தாது உப்புகள் காணப்படுகின்றன. * வைட்டமின் D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது. * வைட்டமின் A குறைப்பாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. * வைட்டமின் B குறைப்பாட்டினால் பெரி-பெரி என்னும் நோய் ஏற்படுகிறது. * வைட்டமின் C குறைப்பாட்டினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது. * வைட்டமின் D குறைப்பாட்டினால் ரிக்கட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. * வைட்டமின் E குறைப்பாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. * வைட்டமின் K குறைப்பாட்டினால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது. * புரதம் குறைபாட்டினால் குவாஷியோர்கள், மராஸ்மஸ் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. * கால்சியம் குறைப்பாட்டினால் எலும்பு மற்றும் பல் சிதைவு ஏற்படுகிறது. * இரும்பு சத்து குறைப்பாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது. * அயோடின் குறைப்பாட்டினால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது. * அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவாகும். * ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்பதால் குறைபாட்டு நோய்களைத் தவிர்க்கலாம். * சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாவரங்கள் ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது - ஒளிச்சேர்க்கை * உணவூட்டம் என்பது - உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் என பல நிலைகளை உடையது. * தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் - தற்சார்பு ஊட்ட முறை. * தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா * ஒட்டுண்ணி உணவூட்டத்துக்கு எடுத்துக்காட்டு -கஸ்க்யூட்டா * கஸ்க்யூட்டாவின் அறிவியல் பெயர் - கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸா( ஊர்களில் அழைக்கப்படும் பெயர்- அம்மையார் கூந்தல், சடதாரி, தங்கக்கொடி) * புற ஒட்டுண்ணிகள் - பேன், அட்டைப்பூச்சி * அக ஒட்டுண்ணி - உருளைப்புழு * சாறுண்ணி - காளான் * தாவரங்களை மட்டுமே உண்பது தாவர உண்ணி (ஆடு, மாடு) * விலங்குகளை மட்டுமே உண்பது மாமிச உண்ணி (புலி) * தாவரங்களையும், விலங்குகளையும் உண்பது அனைத்து உண்ணி (காகம்) * பூச்சி உண்ணும் தாவரம் - நெப்பந்தஸ், டிரோசீரா, யுட்ரிகுலேரியா * ஸ்கர்வி நோய்க்கான அறிகுறி - பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் * ரிக்கட்ஸ் நோய்க்கான அறிகுறி - வலிமையற்ற வளைந்த எலும்பு * மலட்டுத் தன்மைக்கான அறிகுறி - குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல் * இரத்தம் உறையாமைக்கான அறிகுறி - சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல். * முன்கழுத்து கழலை நோய்க்கான அறிகுறி - கழுத்துப் பகுதியில் வீக்கம் காணுதல் * இரத்த சோகை நோய்க்கான அறிகுறி - மயக்கம் வருதல், உடல் சோர்வு. * எலும்பு மற்றும் பல் சிதைவு நோய்க்கான அறிகுறி - எலும்பு, பற்களின் வலிமை குறைதல். * மாலைக்கண் நோய்க்கான அறிகுறி - பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை. * பெரி-பெரி நோய்க்கான அறிகுறி - ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு. * மராஸ்மஸ் நோய்க்கான அறிகுறி - குச்சி போன்ற கை, கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல். * குவாஷியோர்கள் நோய்க்கான அறிகுறி - வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம். ஆதாரம் : கல்விச்சோலை