டி.இ.டி அறிவியல் வினா - விடைகள் * காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள். * நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள். * இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம். * மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம் * தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ் * தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம். * விளையாட்டுச் சாமான்கள் ,கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - வில்லோ * டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - மல்பரி. * விவசாயம் என்பது - ஓர் அறிவியலாகும். * ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு விடைக்காண மேற்கொள்ளும் அனைத்து வகைச் செயல்பாடுகளும் - அறிவியல் ஆகும். * பூமி, விண்வெளி, அதில் உள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை என விரிவடையும் அறிவியல் - இயற்பியல். * விலங்குகளைப் பற்றி படிப்பது - விலங்கியல். * நாம் பயன்படுத்தும் பொருள்கள் உலோகமா? அலோகமா? அதன் தன்மை? சுவை? அமிலமா? காரமா?, நெடிகள் என்ன? என்று ஆராய்வது - வேதியியல் * உயிருள்ளவைப் பற்றி அதாவது செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி படிப்பது - உயிரியல். * செடி கொடிகள், மரங்கள் பற்றி படிப்பது - தாவரவியல். * ஆடைகள், பயன்படுத்தும் கயிறு, சாக்குப் பைகள் போன்றவற்றை வழங்குவது - தாவரங்கள். * நாம் உடுத்தும் ஆடைகள் யார் தந்த பரிசு - பருத்தி * மெத்தை, தலையணை, பாய், விரிப்புகள் போன்றவற்றை உருவாக்க பயன்படும் தாவரம் - நார்த்தாவரங்கள். * உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பி உள்ளன - தாவரம் * மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை - மூலிகைகள் என்கிறோம். * கிருமி நாசினி், உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை - மஞ்சள். * பசியைத் தூண்டுவதற்கும், செரிமாமின்மையை மீக்குவதற்கும் பயன்படும் மூலிகை - பிரண்டை. * தொண்டைக் கரகரப்பை நீக்க பயன்படும் மூலிகை - மிளகு. * செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை - இஞ்சி. * வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் மூலிகை - வசம்பு * சளி, காய்ச்சல், கோழை போன்றவற்றை நீக்கும் மூலிகை - துளசி. * கிருமி் நாசினி, உடலுக்கு குளிர்ச்சியையும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு. * மார்புச்சளி, கோழை, சளித்தொல்லைகளை நீக்கி உடலுக்கு பலன் தரும் மூலிகை - தூதுவளை. * மஞ்சள் காமாலை நீக்கும் மூலிகை - கீழாநெல்லி. * வியர்வை பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலை நீக்கும் மூலிகை - ஓமவல்லி. * வாய்ப் புண்ணை நீக்கவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை - நெல்லிக்காய். * இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் - நெல்லி * குளியல் சோப்பு, மூகப் பவுடர், பூச்சு, வாசனைத் திரவியம் போன்ற அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது - மலர்கள். * எந்தத் தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுவது - துவரை. * ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து எத்தனை தர்ப்பூசணிகச் செடிகளை உற்பத்தி செய்து, 180 டன் எடையுள்ள தர்ப்பூசணிகளைப் பெறலாம் - 6,00,000 * தீப்பற்றாத ரெட்வுட் மரம் - செம்மரம். * மிகப் பெரிய பூப்பூக்கும் தாவரம் - ராஃப்லேசியா. இவை ஒரு மீட்டர் விட்டம் கொண்டது. * ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள போபாப் என்னும் மரங்களின் தண்டுப்பகுதி மிகவும் அகலமானவை. * ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து நிறுத்தமாக எந்த மரத்தின் தண்டுப் பகுதிகள் அமைந்துள்ளன - போபாப். * பழம் வகை மரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் - ஆரஞ்சு மரம் (400 ஆண்டுகள்) * வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர் - கும்பகோணம். * மதுரைக்கு புகழ் பெற்ற மலர் - மல்லிகை * தஞ்சைக்கு அதிகம் விளையும் பயிர் - நெல் * இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா. * தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வன்கட்டை * தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மென்கட்டை * மென்கட்டை தாவரத்தின் நீரினைக் கடத்த உதவுகிறது. * தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும் உறுதியையும் அளிப்பது - வன்கட்டை * மென்கட்டையை விட அதிக உறுதியானது - வன்கட்டை * வன்கட்டையை எவையெல்லாம் சிதைப்பதில்லை - பூஞ்சைகள், கரையான்கள், துளையிடும் பூச்சிகள். * வன்கட்டையில் காணப்படுவது - பிசின், அரக்கு, ரெஸின் மற்றும் எண்ணெய் * வன்கட்டை - கடினத் தன்மையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையும் கொண்டது. * அதிக மெருகேறும் தன்மையும், கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுவது - வன்கட்டை. * நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும். * மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு - பருத்தி, தேங்காய் இலவம் பஞ்சு (விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படுகிறது) * இலைகளில் இருந்து பெறப்படும் நார்கள் - இலை நார்கள் (அன்னாச்சி, கற்றாழை) * தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படும் நார்கள் - தண்டு நார்கள் ( சணல்) * நாருக்காக மட்டுமின்றி வேறு சில பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் தாவரம் - ஹெம்ப் என்ற சணல் தாவரம். * ஹெம்ப் என்ற சணல் தாவரத்தில் 85 சதவிகிதம் செல்லுலோஸ் உள்ளதால் உயிரி பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. * மண்ணில் மக்கும் தன்மையுடையது - உயிரி பிளாஸ்டிக். * இஞ்சி, மஞ்சள் போன்ற தாவரங்கள் தண்டுப் பகுதி தரைக்குக் கீழ் உள்ளவை. இவையே உணவைச் சேமிக்கும் வேலையைச் செய்கிறது. * தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (Mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆதாரம் : கல்விச்சோலை