ஆயுர்வேதம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றுபடுத்தும்

ஆயுர்வேதம் கி.மு 600 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றியது. இந்த புதியமுறை மருத்துவம் உடலில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்கிறது. ஆயுர்வேதம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை ஆரியர்களாலும் திராவிடர்களாலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று இது மருத்துவத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்த இன்றியமையாத பிரிவாக உள்ளது. உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப கண்டறியப்பட்ட நோயின் அடிப்படையில் வாதம், பித்தம், கபம், ஆகியவற்றை சமநிலையில் வைப்பதற்கான ஒரு முழுமையான இயற்கை மருத்துவம் இதுவாகும்.

ஆயுர்வேதம் பாதிக்கப்பட்ட உடம்பிற்கு மட்டுமல்லாமல் முழு உடலுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என நம்புகிறது. உங்களை இயற்கையான வழியில் புத்துணர்ச்சி ஊட்டுவதற்கும் உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றி அதன் மூலம் நிலையான எதிர்ப்பாற்றலையும் நல்ல ஆரோக்கியத்தையும் உருவாக்கவும் இது உதவுகிறது.

ஆயுர்வேத பூமி, கேரளா

கேரளாவின் சமச்சீரான காலநிலை, இயற்கை வளங்கள் நிறைந்த காடுகள் (மூலிகை மற்றும் மருத்துவ செடிகளின் வளங்கள் நிறைந்த) மற்றும் ஈரமான காலநிலை (ஜூன்-ஜூலை மற்றும் அக்டோபர்-நவம்பர்) ஆகியவை ஆயுர்வேதத்தின் குணப்படுத்தும் மற்றும் ஆரோக்கியம் தரும் செயலுக்கு ஏற்றதாக உள்ளன.

உண்மையில் இன்று இந்தியாவில் கேரளாவில் மட்டுமே இம்மருத்துவ முறை முழு அர்ப்பணிப்புடன் நடைபெற்று வருகிறது.

பருவ மழைக்காலம், புத்துணர்வூட்டலுக்கான சரியான காலமாகும்

பாரம்பரிய ஆய்வுகள், பருவ மழைக்காலம் தான் புத்துணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற காலம் என்பதைத் தெரியப்படுத்தியுள்ளது. வானிலை தூசு இல்லாமலும் ஈரப்பதத்துடனும் இருப்பதால் அது உடலிலுள்ள துவாரங்களை பெரிதுபடுத்துவதால் மூலிகை எண்ணெய் மற்றும் தெரபிகள் பயன்படுத்த இது ஏற்றதாக உள்ளது.

புத்துணர்ச்சி தெரபி (இரசாயன சிகிச்சை)

தோல் பராமரிப்பு மற்றும் புத்துணர்ச்சி மற்றும் வலுவான திசுக்கள் ஆகியவற்றின் காரணமாக நெடுநாளாக ஆரோக்கியமாக வாழ முடிகிறது. உடலுக்கு ‘புத்துணர்வூட்டி’ (முதன்மை சுறுசுறுப்பு) மற்றும் ‘சாத்வா’ (மனத் தெளிவை) அதிகரிக்கச் செய்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. தலை மற்றும் முகத்திற்கான மருத்துவ எண்ணெய் மற்றும் கிரீம் களோடு கூடிய மசாஜ், கை, பாதம் போன்றவற்றில் மூலிகை எண்ணெய் மற்றும் தூளோடு கூடிய மசாஜ், புத்துணர்ச்சிக்காக உள் கொடுக்கப்படும் மருந்துகள், மருந்தேற்றப்பட்ட நீராவி குளியல் போன்றவை இதில் அடங்கும். மூலிகை குளியல்களும் கூட பயன்படுத்தப்படுகின்றன.

உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் நீண்ட ஆயுள் மருத்துவம் (காய கல்ப சிகிச்சை)

இது முதுமை அடையும் செயற்பாங்கினை குறைத்து உடல் செயல்கள் சீர்கேடு அடைவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் ஒரு முதன்மையான சிகிச்சை ஆகும். இது இரசாயனத்தை உள்ளே எடுத்துக் கொண்டு (சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடு) முழுமையான உடல் பராமரிப்பு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த மருத்துவம் 50 வயதிற்கு முன்பாக எடுத்துக் கொண்டால் இருபாலாருக்கும் மிகவும் பயன் தருவதாக இருக்கும்

உடல் வெதுவெதுப்பூட்டல் (ஸ்வேதகர்மம்)

மருந்தேற்றப்பட்ட நீராவி குளியல் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி தோலை மினுமினுப்படையவும் தோல் நிறைந்த மேம்படுத்தவும் செய்வதோடு உடல் கொழுப்பையும் குறைக்கிறது. மேலும் இது சில மூட்டு வலி நோய்களுக்கும் குறிப்பாக வலிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. முதலாவது மூலிகைகள் மற்றும் மருத்துவ இலைகள் கொதிக்க வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் நீராவி 10 முதல் 20 நிமிடங்கள் உடல் முழுவதும் படும்படி செய்யப்படுகிறது. மருந்து எண்ணெய் மற்றும் மூலிகைத்தூள் கொண்டு கைகளுக்கு மசாஜ் கொடுக்கப்படுவதால் அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு தசைகளில் மினுமினுப்பை ஏற்படுத்துகிறது.

அழகு பராமரிப்பு

மூலிகை முகப்பூச்சு, மூலிகை எண்ணெய் மசாஜ், மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை நிறத்தைக் கூட்டி உடலுக்கு அழகு தரும்.

மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு (தியானம் மற்றும் யோகா) மனம் மற்றும் உடற்பயிற்சிகள் அகங்காரத்தை உடல் மற்றும் மனதிலிருந்து எடுத்துவிடுகிறது. கவனத்தை ஒரு முகப்படுத்துவதற்காகவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் சமாதானத்தை பெறுவதற்காக எட்டு நிலைகளில் அதனை அடைவதற்கான வழிகள்.

ஒழுக்க நடைமுறைகள் (யாமா)

சுய சுத்திகரிப்பு (நயாமா)

உடலை தாமரை நிலையில் நிலைநிறுத்துதல் (ஆசனா)

மூச்சை கட்டுபடுத்துதல் (பிராணயாமா)

உணர்வுகளை கட்டுப்படுத்துதல் (பிரத்தியகர்மா)

தெரிந்தெடுத்த பொருளின் மீது நமது கவனத்தை குவித்தல் (தரானா)

தியானம் (தியானா)

சமாதி இதன் மூலம் நீங்கள் முழுவதுமான சாந்தியையும் ஆரோக்கியத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

முழுமையான கட்டுடல் (பஞ்சகர்மா சிகிச்சை)

மனது மற்றும் உடல் நலனுக்காகவும் உடல் ஒருங்கிணைவு, உறுப்புகள், மனம், மூச்சு, நரம்புகள், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றிற்காக ஐந்து மடிப்பு சிகிச்சை தரப்படுகிறது.

நோய்தீர்ப்பு நிகழ்ச்சிகள்

நாட்பட்ட தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம், மன நோய், கனவு, பைத்தியம் போன்றவற்றிற்கான மருத்துவம் (தாரா)

மூலிகை எண்ணெய், மருந்து பால் அல்லது தயிர் மற்றும் மருந்துச்சாறுகள் நாள் முழுவதும் இருக்கும் படியாக நெற்றியில் பூசப்படுகின்றன. ஓர்த்துவங்க தாரா (கண், காதுகள் மற்றும் தோல் நோய்களுக்கு நல்லது) தக்ரா தாரா (மறதி, அதிக தலைவலி, பைத்தியம்) மற்றும் சர்வாங்கத தாரா (தலை மற்றும் உடலுக்கு) போன்ற வெவ்வேறு மருத்துவ சிகிச்சை உள்ளது.

மூட்டுவாதம், லூக்கிமியா ஆகியவற்றை கட்டுபடுத்தும் மருத்துவம் (சீனேகபணம்) :

மருந்தேற்றப்பட்ட நெய் உட்க்கொள்வதற்காக கொடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலம் வரை படிப்படியாக அளவு அதிகரித்துத் தரப்படும்.

மூக்கு வறண்டு போதல், வாய் மற்றும் தொண்டை வறட்சி, அதிக தலைவலி, முகம் மரத்துப் போதல் தலையில் எரிச்சல் உணர்வுக்கான சிகிச்சை (சிரோவாஸ்தி) :

தோல் தொப்பி ஒன்று தலையில் பொருத்தி ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மருத்துவ பரிந்துரைப்படி வெதுவெதுப்பான எண்ணெய்யை தொப்பிக்குள் ஊற்றுதல்.

தண்டுவட வீக்கம் மற்றும் மூட்டு நோய்களான மூட்டு வீக்கம், முடக்கு வாதம், பக்க வாதம், நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்புச் சிதைவிற்கான சிகிச்சை (பிழிச்சில்) :

வெதுவெதுப்பான மூலிகை எண்ணெய் தூய லினன் துணி மூலம் உடல் முழுவதும் தேய்த்து ஒவ்வொரு நாளும் 1 முதல் 1½ மணி நேரம் வரை முறையாக பயிற்சி பெற்ற மாசாஜ் நிபுணர் மூலம் 7 முதல் 21 நாட்கள் வரை சரியாக மசாஜ் செய்ய வேண்டும்.

பக்கவாதம், முடக்குவாதம், உடல் பருமன் மற்றும் சில குறிப்பிட்ட வாதங்களுக்கான மருத்துவம் (உடுவார்த்தனம்) : மூலிகைத்தூள் மூலம் நோய்தீர்ப்பு, மசாஜ்

அதிர்ச்சிக் கோளாறு அல்லது விபத்தினால் ஏற்பட்ட தசை முறிவு நோய்க்கான மருத்துவம் (மர்ம சிகிட்சா)

உடலின் முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் அதிகப்படியான கூச்ச உணர்வுகளுக்கான மருத்துவம் (107 மர்மாஸ்).

மூக்குத் தொடர்பான நோய்களுக்கான மருத்துவம் (நாஸ்யம்) :

மருத்துவ மூலிகைத் தயாரிப்புகளை சுவாசித்தல், கசாய எண்ணெய், நெய் போன்றவை தலை கழுத்துப் பகுதியில் இருக்கும் அதிகபடியான எடையை வெளியேற்றுகிறது.

காது நோய்களுக்கான மருத்துவம் (கர்ண பூரணம்) :

நாளும் 5 முதல் 10 நிமிடம் வரை மருத்துவ எண்ணெய் மற்றும் சிறப்புமிக்க மருந்து மருத்துவமும் தரப்படுகிறது.

கண்நோய் தடுப்பு மற்றும் பார்வை வலுவூட்டல் (தர்பனம்) :

கண்களுக்கான சிகிச்சை கண்நோய் ஏற்படுவதைத் தடுக்கச் செய்வதோடு பார்வை நரம்பை வலுவடையச் செய்கிறது.

தசை உருக்குதல், மூட்டு வாதம், விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், மூட்டு வலி, உடல் உறுப்புகள் இளைத்துப் போதல் மற்றும் சில வகையான தோல் நோய்களுக்கான சிகிச்சை (நிஜவரகிழி) :

மருந்தேற்றப்பட்ட அரிசி கட்டு மஸ்லின் துணிப்பைகளில் தட்டப்பட்டு வெளிப்புறமாக முழு உடலிலும் வியர்வை வரும் வரை ஒத்தடம் தரப்படுகிறது.

ஆதாரம் : கேரளா சுற்றலாத்துறை