முதன்மைகள்

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

22. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசக வதம் (1916)

23. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

43. மிகப் பழமையான அணை – கல்லணை

44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்

1. நீலகிரி மலை

2. ஆனை மலை

3. பழனி மலை

4. கொடைக்கானல் குன்று

5. குற்றால மலை

6. மகேந்திரகிரி மலை

7. அகத்தியர் மலை

8. ஏலக்காய் மலை

9. சிவகிரி மலை

10. வருஷநாடு மலை

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்

1. ஜவ்வாது மலை

2. கல்வராயன் மலை

3. சேர்வராயன் மலை

4. பச்சை மலை

5. கொல்லி மலை

6. ஏலகிரி மலை

7. செஞ்சி மலை

8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்

9. பல்லாவரம்

10. வண்டலூர்

தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்

1. ஊட்டி

2. கொடைக்கானல்

3. குன்னுர்

4. கோத்தகிரி

5. ஏற்காடு

6. ஏலகிரி

7. வால்பாறை

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்

1. தால்காட் கணவாய்

2. போர்காட் கணவாய்

3. பாலக்காட்டுக் கணவாய்

4. செங்கோட்டைக் கணவாய்

5. ஆரல்வாய்க் கணவாய்

6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)

7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)

முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்

காவேரி – 760 கி.மீ

தென்பெண்ணை – 396 கி.மீ

பாலாறு – 348 கி.மீ

வைகை – 258 கி.மீ

பவானி – 210 கி.மீ

தாமிரபரணி – 130 கி.மீ

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்

குற்றாலம் – திருநெல்வேலி

பாபநாசம் - திருநெல்வேலி

கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி

ஒகேனக்கல் – தருமபுரி

சுருளி – தேனி

திருமூர்த்தி – கோவை

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்