அடிப்படை பொது அறிவு தகவல்கள்

1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.

2. நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் ‘ஒலி எழுப்புக’ என்பதற்கு பதில்…? - ஒலி எனக்கு (Sound to me)

3. கவனம் – புலன் காட்சிகள் அடிப்படையாகும்.

4. கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.

5. ஒருவனுடைய கற்கும்திறன் – உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.

6. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.

7. முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.

8. கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.

9. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை - பொருள்கள் காரணிகள்.

10. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு – தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.

11. ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன? - வளருதல்

12. ஒப்புடைமை விதி என்பது – குழுவாக எண்ணுதல்.

13. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? – ஐந்து

14. மனிதனின் புலன் உறுப்புகள் – அறிவின் வாயில்கள்.

15. ”உளவியல் என்பது நனவு நிலை பற்றியது” இதனை வலியுறுத்தியவர் – வாட்சன்

16. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் –கான்ட்

17. உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் – கான்ட்

18. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் – ஏ.குரோ, சி.டி.குரோ

19. எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை – போட்டி முறை

20. நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை – அகநோக்கு முறை.

21. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை – கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.

22. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை – வினாவரிசை முறை.

23. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.

24. தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை – பரிசோதனை முறை.

25. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை – பரிசோதனை முறை.

26. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் – மாண்டிசோரி.

27. டோரனஸ் என்பவர் தந்துவவாதி.

28. தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் – மாஸ்லோ

29. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்

30. சமூக மனவியல் வல்லுநர் – பாவ்லாவ்

31. முன்பருவக் கல்வியுடன் தொடர்பில்லாதவர் – ஜான்டூயி

32. மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக்குறிக்கும் – அடிப்படைத் தேவைகள்.

33. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் – ஃபிராய்டு.

34. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் – மெக்லிலாண்டு.

35. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் – ஏ.எஸ். நீல்

36. குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் – தார்ண்டைக்

37. சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் – டார்வின்

38. மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? – மனவெழுச்சி நீட்சி

39. குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.

40. ‘சோபி’ என்பது என்ன? – ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.

41. உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் – கோஹலர்

42. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் – சுல்தான்.

43. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது – பால்லாவ்.

44. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் – அறிவுத்திறன் வளர்ச்சி.

45. மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் – மனவெழுச்சி.

46. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது – பெரு மூளை.

47. ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? – மூன்றாம் நிலை.

48. பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடர்புடையது? – உடல் தேவை

49. அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக்கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார்? -எல். தர்ஸ்டன்.

50. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? – ஏழு

51. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை – உற்று நோக்கல் முறை.

52. மனவெழுச்சி என்பது - உணர்ச்சி மேலோங்கிய நிலை

53. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? – சூழ்நிலை.

54. ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்? – மெண்டல்

55. ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? – அயோவா

56. உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் – மக்டூகல்

57. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? – மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.

58. உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.

59. உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் – வாட்சன்.

60. பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.

61. பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

62. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை – மதிப்பீட்டு முறை

63. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை – உற்று நோக்கல் முறை

64. உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை

65. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது – மரபு+ சூழ்நிலை

66. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் – மனவெழுச்சி வளர்ச்சி.

67. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் – அறிவுத் திறனால்.

68. உடலால் செய்யப்படும் செயல்கள் எது? – நீந்துதல்.

69. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் – பியாஜே

70. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார்? – கால்டன்.

71. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? – நுண்ணறிவு.

72. கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எது? – கல்வி உளவியல்

73. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.

74. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் – மெய்விளக்கவியல்.

75. ‘உன்னையே நீ அறிவாய்’ எனக் கூறியவர் – சாக்ரடீஸ்

76. உற்றுநோக்கலின் படிகள் – ஏழு

77. உற்றுநோக்கலின் இறுதிப்படி – நடத்திய ஆய்வு செய்தல்

78. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.

79. பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? – கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

80. மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது – தர்க்கவியல்

81. அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் – தொட்டுணரும் பருவம்.

82. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் – கார்ல் பியர்சன்

83. அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் – இலத்தீன் மொழிச் சொல்

84. குரோமோசோம்களில் காணப்படுவது – ஜீன்ஸ்

85. குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் – லிப்டன்

86. திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் – சூழ்நிலை

87. ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் – இல்பொருள் காட்சி

88. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

89. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன – புத்தகம்.

90. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.

91. ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் – சுவிட்சர்லாந்து

92. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் –பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.

93. குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க – பேச்சுக்கு முந்தைய நிலை

94. கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை – கற்பனை

95. ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? – மீள் ஆக்கக் கற்பனை.

96. நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது – படைப்புக்கற்பனை.

97. ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

98. எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் – எட்டு.

99. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று – கவர்ச்சி

100. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை – பல்புலன் வழிக்கற்றல்.

உளவியல்

1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் – டிட்ச்னர் (Edward Bradford Titchener)

2. மானிட உளவியல் Humanistic Psychology – கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ

3. உளவியல் பரிசோசனைகள் – வெபர் (E.H.Weber)

4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) – ஃபெச்சனர் (Gustav.T.Fechner)

5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் – வல்கம் வுண்ட் Wilhelm Wundt

6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் – சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்

7. மருத்துவ உளவியல் முறைகள் – மெஸ்மர்

8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.

9. நுண்ணறிவுச் சோதனைகள் – பினே Alfred Binet, சைமன் Theodore Simon

10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் – ஸ்கின்னர் (B.F.Skinner)

11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் – கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

12. சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne

13. முழுமைக்காட்சிக் கோட்பாடு – கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் – பாவ்லவ் Irvanpetrovich Pavlov

15. முயன்று தவறிக் கற்றல் – தார்ண்டைக்

16. நடத்தையியல் (Behaviourism) – வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு – ஹல்

18. உட்காட்சி மூலம் கற்றல் – கோலர்

19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை – ஆல்பிரட் பீனே

20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு – ஜே.பி.கில்போர்டு

21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் – வெர்னன்

22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை – தார்ண்டைக்

23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை – எல்.எல்.தார்ஸ்டன்

24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை – ஸ்பியர்மென் (Charles Spearman)

25. இயல்பூக்கக் கொள்கை – வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

26. குறிக்கோள் கோட்பாடு – பாக்லி W.C.Bagley

27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு – ஜட்

28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு – தார்ண்டைக்

29. மறத்தல் சோதனை – எபிங்காஸ் – H.Ebbinhaus

30. மறத்தல் கோட்பாடு – பார்ட்லட்

31. அடைவூக்கம் – டேவிட் மெக்லிலெண்ட்

32. படிநிலைக் கற்றல் கோட்பாடு – காக்னே

33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு – டெம்போ(Dembo)

35. பார்வைத் திரிபுக் காட்சி – முல்லர், லயர்

36. முதன்மைக் கற்றல் விதிகள் – தார்ண்டைக்

37. நவீன உளவியலின் தந்தை – பிராய்டு

38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் – ஸ்டான்லி ஹால்

39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை – யூங்

40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை – முர்ரே – மார்கன்.

41. மைத்தடச் சோதனை – ஹெர்மான் ரோர்சாக்

42. பகுப்பு உளவியல் – கார்ல் ஜி யூங்

43. தனி நபர் உளவியல் – ஆட்லர்

44. உளப்பகுப்புக் கோட்பாடு – சிக்மண்ட் பிராய்ட்

45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை – சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்

46. வகைப்பாடு – அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – ஐசன்க்(H.J.Eysenck)

47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்

48. வகைப்பாடு ஆளுமை கொள்கை – ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் –தர்ஸ்டன், லிக்கர்ட்

50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் – பிரெஸ்ஸி

51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் – ஸ்டிராங்

52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் –கூடர் (G.F.Kuder)

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்