பொது அறிவு தகவல்கள் 1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக் 2. செல்லியல் - சைட்டாலஜி 3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி 4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ் 5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ் 6. தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி 7. சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி 8. நோய் இயல் - பேத்தாலஜி 9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி 10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி 11. மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி 12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி 13. மருந்தியல் - ஃபார்மகாலஜி 14. உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி 15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர் 16. மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர் 17. உளவியல் - சைக்காலஜி 18. மொழியியல் - ஃபினாலஜி 19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ் 20. பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி 21. பறவையில் - ஆர்னித்தாலஜி 22. பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி 23. நரம்பியல் - நியூராலஜி 24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ் 25. தோட்டக்கலை - ஹார்டிகல்சர் 26. திசுவியல் - ஹிஸ்டாலஜி 27. நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ் 28. பூஞ்சையியல் - மைக்காலஜி 29. புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி 30. உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி 31. சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி 32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி 33. முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி 34. மனித மரபியல் - ஜெனிடிக்ஸ் 35. தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ் 36. பூச்சியியல் - எண்டமாலஜி 37. மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ் 38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ் 39. விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி 40. வானவியல் - அஸ்ட்ராலஜி 41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி 42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி 43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி 44. ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி 45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி 46. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட் 47. ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை 48. பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேகமாற்றம் 49. மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - அதிவேகமாற்றம் 50. ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை 51. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு 52. எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம் 53. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம் 54. மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம் 55. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம் 56. இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி 57. நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல் 58. அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு 59. துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல் 60. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால் 61. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி 62. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல் 63. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு 64. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி 65. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல் 66. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி 67. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல் 68. ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை 69. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு 70. ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன் 71. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை 72. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம் 73. விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் 74. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல் 75. தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல் 76. ஆடு ஒரு - தாவர உண்ணி 77. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம் 78. தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி 79. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள் 80. எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில் 81. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ் 82. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை 83. கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு 84. சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட் 85. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம் 86. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம் 87. விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது - அமீபா 88. அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன் 89. ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு - சிங்கம் 90. தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு - யானை 91. ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம் 92. விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை 93. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல் 94. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம் 95. கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை 96. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு 97. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல் ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்