கல்வியியல்

1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம்

2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் போது…… ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி

3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள்

4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது - ஸ்கீமா

5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை

6 கவனவீச்சு அறிய உதவும் கருவி? டாச்சிஸ்டாஸ் கோப்

7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது? மனவெழுச்சி அதிர்வுகள்

8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - பியாஜே

9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர்மென்

10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100

11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் - தர்ம சிந்தனை

12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று - மனப்பாடம் செய்து கற்றல்

13 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் ரூசோ

14 தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி

15 கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை

16 சிக்கலான பொதுமைக் கருத்து - சிறிய நீல நிற சதுர கட்டை

17 கற்றலுக்கு உதவாத காரணி - தனிப்பட்ட காரணி

18 மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் - ஆக்கச் சிந்தனை

19 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - மனப்பாடம் செய்வித்தல்

20 குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது - 1959 நவம்பர் 20

21 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - மறுபடி செய்தல்

22 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவனித்தல்

23 வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்

24 கற்றலின் அடைவு திறன்

25 நடத்தை கோட்பாட்டின் அடிப்படை தூண்டல்-துலங்கல்

26 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

27 சராசரி நுண்ணறிவு ஈவு 90-109

28 ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்

29 தர்க்கரீதியான சிந்தனை என்பது விரி சிந்தனை

30 நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் எபிங்கஸ்

31 தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகிர்தலை பிரபலப்படுத்தியவர் கார்ல்ரோஜர்ஸ்

32 கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு

33 மனப்போராட்டங்களின் வகைகள் 3

34 கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்

35 கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் Y

36 நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? CAVD

37 தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் புலன் உறுப்புகள்

38 குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் ஸ்டான்லி ஹால்

39 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி

40 நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் - உயிரியல் மரபு நிலை

41 ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு r = 0.87

42 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை - கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை

43 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்

44 தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது நல்வழி காட்டுதல்

45 நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது 15-16

46 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை 10

47 அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யுங்

48 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை

49 மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது 3-6

50 ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது SER = DXSHR x K - I

51 மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.

52 கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? 87.5 & 114.5

53 ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது சிக்காகோ

54 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்

55 ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8

56 நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM

57 VIBGYOR என்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - நினைவு சூத்திரங்கள்

58 புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை

59 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி

60 கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை

61 பிரயாஜெயின் ((பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது

62 தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்

63 கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி

64 மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை

65 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்

66 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ

67 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது பரிசு

68 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்

69 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.

70 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் டார்வின்

71 மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன மனவெழுச்சி நீட்சி

72 குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் தார்ண்டைக்

73 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு

74 மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் அடிப்படைத் தேவைகள்

75 தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் மாஸ்லோ

76 தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது கவன மாற்றம்

77 குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு

78 கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை

79 உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்

80 நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்

81 அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு

82 மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்

83 நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப் பரவல்.

84 பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை

85 ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்

86 வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி

87 மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்

88 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்

89 அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்

90 காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8

91 பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை

92 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு

93 ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை

94 நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5

95 பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை

96 ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்

97 முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்

98 தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது - கட்டுப்பாடு இல்லாமை

99 நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்

100 கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி

101 புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை

102 வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை

103 தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.

104 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு

105 மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978

106 ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி

107 ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது தேக்கம்

108 இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்

109 ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் தாய்மொழி

110 மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்

111 குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது குமாரப்பருவம்

112 ஸ்கீமா எனப்படுவது முந்தைய அறிவு

114 தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே

115 சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் - நமது பாதுகாப்பு அமைச்சர்

116 சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா

117 விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்

118 டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி

119 நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே

120 ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்

121 தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்

122 சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்

123 மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்சாட்டில்

124 குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் நெஸ் மற்றும் ஷிப்மேன்

125 தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்

126 தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு

127 தன்னையே ஆராயும் முறை என்பது அகநோக்கு முறை

128 உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்

129 ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை உற்றுநோக்கல் முறை

130 மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது ஆசிரியர்

131 மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்

132 ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் நான்கு

133 நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர்

134 பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் - ஒத்திருக்கும் விதி

135 ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் கிரிகோர் மெண்டல்

136 ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது வேற்றுமுறை விதி.

137 மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்

138 கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை 1260

139 அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்

140 அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை

141 ஆரம்பக் கல்வி வயதினர் பின் குழந்தைப் பருவம்

142 ஒப்பர் குழு என்பது சமவயது குழந்தைகள்

143 அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம்.

144 உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்

145 குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது பாராட்டும், ஊக்கமும்

146 தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்

147 சிக்கலான மனவெழுச்சி பொறாமை

148 மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி

149 மிகை நிலை மனம் ஏற்படும் வயது 3-6

150 அடிப்படை மனவெழுச்சி சினம்

151 அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்

152 வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது பேசுதல்

153 மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்

154 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

155 குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.

156 மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்

157 வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.

158 குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு

159 சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.

160 குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.

161 அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர் பியாஜே

162 அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.

163 அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.

164 மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை

165 உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்

166 தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005

167 மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8

168 சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்

169 குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்

170 பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்

171 பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்

172 குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்

173 கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை

174 ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்

175 குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்

176 குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி

177 குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது. தன்னடையாளம்

178 தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்

179 குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்

180 உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்

181 நடத்தையைப் பற்றி ஆராயும் இயல் உளவியல்

182 செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி

183 பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்

184 புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி

185 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்

186 நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி

187 பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்

188 செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்

189 மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி

190 இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் கற்றல்

191 கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்

192 ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்

193 நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.

194 கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்

195 சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934

196 தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35

197 கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்

198 கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு

199 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

200 படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

201 குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.

202 மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்

203 தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி, விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி

204 உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

205 விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)

206 பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை

207 நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்

208 பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.

209 பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி

210 மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்

211 வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60

212 இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்

213 ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு

214 பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா

215 நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்

216 இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913

217 பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி

218 Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

219 The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

220 Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

221 Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி

222 மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு

223 Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல் ரஸ்ஸல்

224 ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்

225 நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்

226 கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்

227 தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy

228 Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ

229 ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா

230 பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி

231 இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் ரூஸோவின் தத்துவம்

232 பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70

233 மூடர்கள் - நுண்ணறிவு ஈவு 20-50

234 முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு 0-20

235 நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.

236 The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - ஸ்கின்னர்

237 கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி

238 நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு

239 இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு

240 தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1978

241 மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

242 பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி

243 குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24

244 அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

245 இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் டீர்னிக் வெட் போடவேண்டும்

246 பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்

247 கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம்

248 பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்

249 கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்

250 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

251 மறத்தல் சோதனை - எபிங்காஸ்

252 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

253 பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

254 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

255 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

256 குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

257 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

258 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

259 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

260 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

261 ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12

262 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா

263 டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்

264 முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன வீச்சு - 6-7 ஆக இருக்கும்.

265 உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.

266 லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.

267 சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்

268 சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.

269 கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.

270 மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை

271 பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை

272 ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை

273 சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்

274 சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி

275 சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ

276 பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி

277 பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி

278 நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி

279 சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்

280 பள்ளியை விடுதல் என்ற கருத்தினை முன்மொழிந்தவர் - இவான் இலிச்

281 ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18

282 நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்

283 சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

284 வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்

285 ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா

286 பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பரிந்துரைத்த குழு - கோத்தாரி குழு

287 முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968

288 குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF

289 IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985

290 SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்

291 மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்

292 ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்

293 கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்

294 வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.

295 கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.

296 யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி

297 RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்

298 ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்

299 மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

300 மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்

301 மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்

302 குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்

303 PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்

304 மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்

305 உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்

306 இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்

307 வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5

308 குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்

309 ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு

310 மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை

311 SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்

312 ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்

313 மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69

314 குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்

315 சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.

316 மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்

317 கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை

318 இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ

319 கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT

320 அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.

321 அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.

322 மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை

323 எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.

324 எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.

325 குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.

326 மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.

327 சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.

328 உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.

329 உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.

330 வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்

331 பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ

332 முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.

333 மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.

334 தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.

335 குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்

336 தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.

337 எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.

338 வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம் - குமரப் பருவம்.

339 மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.

340 பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144

341 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130

342 மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95

343 மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90

344 உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.

345 கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.

346 முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.

347 சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு

348 ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை

349 தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்

350 ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.

351 காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு

352 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்

353 சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.

354 மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

355 பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.

356 குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்

357 ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.

358 ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.

359 பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்

360 ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.

361 உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு

362 பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்

363 புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் சர் பிரான்சிஸ் கால்டன்.

364 ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்

365 உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்

366 உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்

367 வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.

368 வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

369 கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.

370 கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்

371 அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்

372 நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.

373 அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்

374 கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.

375 விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்

376 வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

377 தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்

378 ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை

379 நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்

380 கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்

381 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.

382 குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு

383 கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)

384 எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு

385 ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்

386 பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை

387 வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்

388 உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை

389 ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்

390 பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.

391 கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை

392 உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854

393 சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857

394 கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்

395 கல்வி வாய்ப்பில் சமத்துவம் என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது.

396 தற்சோதனை என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம்

397 புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

398 எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ

399 பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு

400 மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10

401 மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்

402 ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்

403 எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்

404 கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது

405 கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல் மூளைச் சக்தி வீணாக்குதல்

406 ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்

407 கவனத்தின் அகக்காரணி - மனோநிலை

408 கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்

409 விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்

410 தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948

411 கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு

412 ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி

413 தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ

ஆதாரம் : கல்விச்சோலை