ஹைதராபாதில் குடியரசுத் தலைவர் நிலையத்தை (Rashtrapati Nilayam) பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக குடியரசுத் தலைவர் காணொலி காட்சி வாயிலாக மார்ச் 22, 2023 அன்று திறந்துவைத்து சிறப்பித்தார். முதல் முறையாக குடியரசுத் தலைவர் நிலையத்தில் பாரம்பரிய கட்டிடம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆண்டிற்கு ஒருமுறை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த நிலையத்தில் தோட்டங்களை பார்வையிட முடிந்தது. குடியரசுத் தலைவரின் தென்பகுதி தங்குமிடத்தை தவிர, குடியரசுத் தலைவர் நிலையத்தை பொதுமக்கள் ஆண்டு தோறும் இனி பார்வையிடுவதற்காக திறக்கப்படும். பார்வையாளர்கள் https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாக தங்களது வருகை நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாக வருகை தந்து முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நிலையத்தை மக்கள் பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் பார்வையிடலாம். பதிவு கட்டணமாக இந்தியருக்கு ரூ. 50 மற்றும் வெளிநாட்டவருக்கு ரூ. 250 வசூலிக்கப்படும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்