"சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் சனவரி 14, 2026 முதல் சனவரி 18, 2026 வரை அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது. 20 இடங்கள், 50-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள், 1500-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து மீண்டும் வருகிறது "சென்னை சங்கமம்". தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னை சங்கமம்! இயல், இசை, நாடகம் என முத்தமிழும் கூடி அலங்கரிக்க வருகிறது சென்னை சங்கமம்! சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும், பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளையும் பார்வையாளர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மையையும் சிறப்புகளையும் ஒரே இடத்தில நிகழ்த்தும் கலைத் தொகுப்பான நிகழ்ச்சி சென்னை சங்கமம். நம் தமிழ் மண்ணையும், அதன் கதைகளையும் ஆடிப்பாடிச் சொல்ல வருகிறார்கள் மக்களின் கலைஞர்கள். நம் பாரம்பரிய கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளின் திரளாக, நம்ம சென்னையில் விண்ணதிரத் தொடங்கவிருக்கிறது. பல நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நம் மண்ணின் பண்பாட்டு அடையாளமாக நடக்கப்போகும் நிகழ்ச்சி சென்னை சங்கமம். சனவரி 14, 2026 - சனவரி 18, 2026சென்னையின் 20 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள்1500-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்கள் சங்கமிக்கும்"சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா"அனைவரும் வாருங்கள்! அனுமதி இலவசம்! வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9