டி.இ.டி அளவீடுகளும் இயக்கமும் * தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும். * தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும். * பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும். * எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு * மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும். * நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது. * FPS முறை - அடி, பவுண்டு, வினாடி * CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி * MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி * பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர். * நீளம், நிறை, காலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும். * நீளத்தின் அலகு - மீட்டர் * நிறையின் அலகு - கிலோகிராம் * காலத்தின் அலகு - வினாடி * 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது. * 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது. * 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது. * ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது. * ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது. * நிறையை அளவிட சட்டத்தராசு, இற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது. * மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின் அளவு குறைவானது. * ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம். * ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது. * ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது. * ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது. * ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது. * ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது. * ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது. * ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது. * ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது. * ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது. * தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம். * மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால் குறிப்பிடுகிறோம். * ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்பு, பருத்தி போன்ற பொருள்களை அளக்க மெட்ரிக்டன், குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம். * அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம். * முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம் போன்றவை பயன்படுத்தப்பட்டன. * உசல் கடிகாரம், கைக்கடிகாரம், நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்க பயன்படுகின்றன. * பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது. * ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ. * ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல். * ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip) * நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும். * பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளது என்கிறோம். * ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது. * ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம் * நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின் இயக்கம்(Lift) * ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும். * குடைராட்டினம், கடிகாரத்தின் முள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தை சேர்ந்தவை. * வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம். * சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடை இராட்டினத்தின் இயக்கம். * சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகார ஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம். * தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம். * அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி, மைக்ரோ வினாடி. * நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரை இருக்கும். ஆதாரம் : கல்விச்சோலை