தாயின் கல்விக்கொடி பாரீர் அதை நிமிர்ந்து பார்த்து சிந்தித்திட வாரீர் தாயின் கல்விக்கொடி பாரீர் அதை நிமிர்ந்து பார்த்து சிந்தித்திட வாரீர் உலகம் சமநிலை பெற வேண்டி அறிவுக்கண் கொண்டு சிந்தித்து பாரீர்-தாயின் கல்விக்கொடி பாரீர் அவர் ஞான சுடரொளி நிரந்தரம் வாழ்க தாயின் கல்விக்கொடி பாரீர் உயர்வு தாழ்விலா நிலைவேண்டி அறிவுக்கண் கொண்டு சிந்தித்து பாரீர்-தாயின் கல்விக்கொடி பாரீர் அவர் ஒற்றுமை சிந்தனை நிரந்தரம் வாழ்க தாயின் கல்விக்கொடி பாரீர் அதை நிமிர்ந்து பார்த்து சிந்தித்திட வாரீர் பாருலகும் போற்றும் பரத நிலத்தேவியின்கல்வி கண் சிறந்திட பட்டொளி வீசி பறக்குது பாரீர்தாயின் கல்விக்கொடி பாரீர் அதை நிமிர்ந்து பார்த்து சிந்தித்திட வாரீர் ஆதாரம் : முனைவர் கோமளலக்ஷ்மி ஜெயராமன்