நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள்

மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது - தைராய்டு

ஹார்மோன்களை சுரப்பவை - நாளமில்லா சுரப்பி

நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு உட்சுரப்பியல் (Endocrinology) என்று பெயர்.

மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது - நாளமில்லா சுரப்பிகள்

ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது - நாளமில்லா சுரப்பி

நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி (Master Gland) எனப்படுவது - பிட்யூட்டரி

எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது - பாராதைராய்டு

மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone - களை சுரப்பது - பிட்யூட்டரி

மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு - கணையம்

ஆளுமை ஹார்மோன் என்பது - தைராக்ஸின்

அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் - அட்ரீனலின்

Fight or Fight Hormone என்று அழைக்கப்படுவது - அட்ரீனலின் ஹார்மோன்

கணையத்திலுள்ள -------- திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. - லாங்கர் ஹான்

சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் - வாஸோபிரஸ்ஸின்

மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் - நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள்

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை