வரலாறு சார்ந்த பொது அறிவு தகவல்கள்

சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் - கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை

நைல் நதியின் நன்கொடை எனப்படுவது - எகிப்திய நாகரீகம்.

யூப்ரடீஸ், டைகரீஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது - மெசபடோமிய நாகரீகம்.

மஞ்சள் நாகரீகம் என்பது - சீன நாகரீகம்

தேநீரை உலகிற்கு அளித்த நாகரீகம் - சீன நாகரீகம்.

ரிக்வேதம், நீங்கலாக ஏனைய பிறவேதங்கள் இயற்றப்பட்டது - பிற்கால வேதகாலம்.

ரிக்வேத கால நாகரீகம் - கிராம நாகரீகம்.

கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி.

பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி.

ரோமானிய நாகரீகம் - உலகிற்கு அளித்த மாபெரும் நன்கொடை - குடியரசுத் தத்துவம்.

உலகின் மிகப் பெரிய கண்டம் - ஆசியா.

உலகின் மிகச்சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா.

இருண்டகண்டம் எனப்படுவது - ஆப்பிரிக்கா.

பாலைவனங்களே இல்லாத கண்டம் - ஐரோப்பா.

நாடுகளே இல்லாத கண்டம் - அண்டார்டிக்கா.

மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட கண்டம் - ஆசியா.

மிகக்குளிரான கண்டம் - அண்டார்டிக்கா.

பூமியின் நுரையீரல் எனப்படும் அமேசான் ஆறு அமைந்துள்ள கண்டம் - தென் அமெரிக்கா.

ஐரோப்பா, ஆசியா ஆகிய இருகண்டங்களாக பரவியுள்ள நாடு - ரஷ்யா.

உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா.

மிக அதிகமான நாடுகளுடன் எல்லையைப் பங்கிடும் நாடுகள் - ரஷ்யா, சீனா (14 நாடுகள்)

ஹெலனிக் குடியரசு எனப்படும் நாடு - கிரீஸ்

அன்னை தெரசா பிறந்த நாடு - யூகோஸ்லேவியா.

யூதர், இஸ்லாமியர், கிருத்தவர் ஆகியோருக்கு பொதுவான புனிதத் தலம் - ஜெருசலேம்.

உலகின் முதன் முதலாக காகித கரன்சி பயன்படித்திய நாடு - சீனா.

கிருத்துவ சமத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடு - அர்மீனியா.

ஆஸ்திரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை - தி லாட்ஜ்.

பிரிக்ஸ் நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா.

கருணைக்கொலைக்கு சட்டபூர்வ ஆங்கீகாரம் வழங்கிய உலகின் முதல் நாடு - ஆஸ்திரேலியா.

இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு - பூடான்.

ஐ.நா. சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு - லீக் ஆஃப் நேஷனல்

ஐ.நா. சபை நடைமுறையில் வந்த நாள் - 1945, அக்டோபர் 24.

ஐ.நா. அலுவல் மொழிகள்: சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபி.

ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நகரம் - நியூயார்க்.

தற்போது ஐ.நா. உறுப்பினர் எண்ணிக்கை - 193

ஐ.நாவில் மிகக் கடைசியாக உறுப்பினரான நாடு - தெற்கு சூடான் (2011)

இந்தியாவில் ஐ.நா. தகவல் மையம் அமைந்துள்ள நகரம் - புதுதில்லி.

ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரம் - டோக்கியோ

கின்னஸ் சாதனைப் புத்தகத்தின்படி மிக அதிகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஐ.நா. ஆவணம் - சர்வதேச மனித உரிமைகள் பற்றிய அறிவிப்பு

ஐ.நா. சபையில் உறுப்பினராகாத ஆசிய நாடு - மங்கோலியா.

ஐ.நா.வின் முதல் சிறப்புக் கழகம் - சர்வதேச தொழிலாளர் கழகம் (ஐஎல்ஒ).

உலக வாணிபக் கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனீவா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு - யுனெஸ்கோ.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் முத்திரைச் சொல் - அமைதிக்கு அணு

சார்க் அமைப்பின் நிரந்தர தலைமையகம் அமைந்துள்ள இடம் - காட்மண்டு.

சார்க என்ற கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளியிட்டவர் - வங்காளதேச அதிபர் சியாவுர் ரஹமான்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு - ASEAN.

ஆம்தெனஸ்டி இன்டர்நேஷலின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - லண்டன்.

ஐ.நா. சபைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான நாடுகளை கொண்டது - அணிசேரா இயக்கம்.

காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் - 54.

ஆதாரம் : கல்விச்சோலை