உலக வனவிலங்கு தினம்

அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

68வது ஐ.ந பொதுச் சபை கூட்டத்தில் (20 டிசம்பர் 2013) அரிய வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து, இந்த தினத்தை 'உலக வனவிலங்கு' தினமாக ஐ.நா அறிவித்தது.

இந்த தினத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய சூழலில், தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்கள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்