அறிமுகம் திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை) பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்கள் 1978 - கவிஞர் சுரதா 1979 - எஸ்.டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன் 1980 - கவிஞர் முத்துலிங்கம் 1981 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 1982 - கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம் 1983 - கவிஞர் வகாப் 1984 - கவிஞர். நா. காமராசன் 1985 - கவிஞர் ஐ. உலகநாதன் 1986 - கவிஞர். மு. மேத்தா 1987- கவிஞர் முடியரசன் 1988- கவிஞர் பொன்னிவளவன் 1989 - கவிஞர் அப்துல் ரகுமான் 1990 - பாவேந்தர் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் 21 பேர் விருது பெற்றனர். 1991 - பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 23 பேர் விருது பெற்றனர். 1992 - கவிஞர் முத்துராமலிங்கம் 1993 - புலவர். பெ. அ. இளஞ்செழியன் 1994 - கவிஞர். கரு. நாகராசன் 1995 -கவிஞர் மறைமலையான் 1996 - கவிஞர். இரா. வைரமுத்து 1997 - முனைவர். சரளா இராசகோபாலன் 1998 - முரசு நெடுமாறன் (மலேசியா) 1999 - சிலம்பொலி சு. செல்லப்பன் 2000 - பாவலர் மணிவேலன் 2001 - கவிஞர் மணிமொழி 2002 - முனைவர் ச.சு. இராமர் இளங்கோ 2003 - பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி 2004 - பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன் 2005 - விருது வழங்கப்படவில்லை 2006 - முனைவர் கா. செல்லப்பன் 2007 - திருச்சி எம்.எஸ். வெங்கடாசலம் 2008 - தமிழச்சி தங்கபாண்டியன் 2009 - கவிஞர் தமிழ்தாசன் 2010 - முனைவர் இரா. இளவரசு 2011 - கவிஞர். ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன் 2012 - முன்னவர் சே. நா. கந்தசாமி 2013 - முனைவர் இராதா செல்லப்பன் 2014 - கண்மதியன் 2015 - டாக்டர்.வி.ரேனுகா தேவி 2016 - கோ பாரதி 2017 - திரு.க. ஜீவபாரதி 2018 - கவிஞர் தியாரூ 2019 - திரு.த.தேனிசை செல்லப்பா 2020 - திரு. அறிவுமதி (எ) மதியழகன் 2021 - புலவர் செந்தலை கவுதமன் 2022 - திரு. வாலாஜா வல்லவன் 2023 - எழுச்சிக் கவிஞர் முத்தரசு 2024 - கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதி ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை