அறிமுகம் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூக நீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அாிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. விருது பெற விரும்புவோர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவம் விருது பெற்றவர்கள் 2006 - தொல். திருமாவளவன் 2007 - ஆர். நல்லக்கண்ணு 2008 - விருது வழங்கப்படவில்லை 2009 - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் 2010 - யசோதா 2011 - சு. காளியப்பன் 2012 - தா. பாண்டியன் 2013 - பேராயர் எம். பிரகாஷ் 2014 - அழி கு.மஹாலிங்கம் 2015 - எ.பொன்னுசாமி 2016 - மருத்துவர் இரா.துரைசாமி 2017 - பா.வளர்மதி 2018 - மருத்துவர் சி.ராமகுரு 2019 - க. அருச்சுனன் 2020 - வரகூர் அ.அருணாச்சலம் 2021 - கே.சந்துரு 2022 - எஸ்.வி.ராஜதுரை ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை