அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சுய கற்றல் ஆன்லைன் திட்டமே அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (AI For All) திட்டமாகும். மாணவர்கள், பெற்றோர்கள், எந்தவொரு துறையையும் சார்ந்த தொழில் வல்லுநர்கள், மூத்த குடிமக்கள் ஆகிய வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ள இத்திட்டம் வழிவகை செய்யும். செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளவும், ‘டிஜிட்டல் முதன்மை மனோபாவத்தை’ உருவாக்கவும் விரும்பம் உள்ளவர்களுக்கு இத்திட்டம் உதவுகிறது. இத்திட்டம் ஏஐ விழிப்புணர்வு (AI Aware) மற்றும் ஏஐ பாராட்டு (AI Appreciate) என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏஐ விழிப்புணர்வு (AI Aware) செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது. மனித நுண்ணறிவு பற்றி விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு அல்லாத இயந்திரங்களை வேறுபடுத்தி காண உதவுகிறது மற்றும் தொழில்நுட்பத்தை சுற்றியுள்ள பரவலான தவறான கருத்துக்களை வெளிக் கொண்டு வருகிறது. ஏஐ பாராட்டு (AI Appreciate) செயற்கை நுண்ணறிவின் வெவ்வேறு களங்களையும் பல்வேறு தொழில்களில் அவற்றின் தாக்கத்தையும் விவரிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றி விரிவாகக் கூறுகிறது. இரண்டு பிரிவுகளையும் சுமார் நான்கு மணி நேரத்தில் நிறைவு செய்ய முடியும். ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் ஒரு குறுகிய மற்றும் எளிதான வினாடி வினாவுடன் படங்கள் மற்றும் ஊடாடும் நடவடிக்கைகள் உள்ளன. இந்த வினாடி வினாவில் வெற்றி பெறும் பயனருக்கு அவர்களின் சமூக ஊடக கணக்குகளில் பகிரக்கூடிய பேட்ஜ் வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த வினாடி வினாவில் அவர்கள் விரும்பும் வண்ணம் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். இந்த வினாடி வினாக்களை அவர்கள் நிறைவு செய்த பின்னர், ஏஐ விழிப்புணர்வு (AI Aware) மற்றும் ஏஐ பாராட்டு (AI Appreciate) பேட்ஜ்களை பெறுகிறார்கள். இரு பிரிவுகளையும் நிறைவு செய்த பின்னர், பயனர்கள் தங்களுக்கு ஒரு சுய கற்றல் திட்டத்தை உருவாக்குவதன் மூலம் அதை முன்னோக்கி கொண்டு செல்லலாம். அவர்கள் ஆர்வமுள்ள களத்தைத் தேர்வு செய்து, தங்களுக்கு ஏற்ற வேகத்தோடு செயற்கை நுண்ணறிவு கற்றல் பயணத்தைத் தொடங்கலாம். அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (AI For All) திட்டம் 11 இந்திய மொழிகளில் வழங்கப்படுகிறது. முழு உள்ளடக்கமும் பல்வேறு திரும்ப பேசும் (talkback) பயன்பாடுகளுடன் பொருந்தக் கூடியது. இது பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு முழுமையாக அணுகக் கூடியதாக இருக்கும். அடிக்கடி கேட்கும் கேள்விகள் அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (AI For All) என்றால் என்ன? செயற்கை நுண்ணறிவு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சுய கற்றல் ஆன்லைன் திட்டமே அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (AI For All) திட்டம் ஆகும். மாணவர்கள், பெற்றோர்கள், எந்தவொரு துறையையும் சார்ந்த தொழில் வல்லுநர்கள், மூத்த குடிமக்கள் ஆகிய வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ள இத்திட்டம் வழிவகை செய்யும். செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளவும், ‘டிஜிட்டல் முதன்மை மனோபாவத்தை’ உருவாக்கவும் விரும்பம் உள்ளவர்களுக்கு இத்திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் யாருக்கானது? இதில் யாரெல்லாம் பங்கு கொள்ள வேண்டும் / கொள்ளலாம்? செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ள ஆர்வமுள்ள அனைவருக்குமானது தான் இந்தத் திட்டம். இது எவருக்கும் திறன் / பயிற்சி அளிக்காது மற்றும் யாரையும் செயற்கை நுண்ணறிவு நிபுணர் ஆக்காது. ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை புரிதலை வழங்குவதோடு, அதைப் பற்றி தொடர்பு கொள்வதற்கு போதுமான திறனை அளிக்கும். தற்போது இந்தத் திட்டம் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, கன்னடம், குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய 11 இந்திய மொழிகளில் வழங்கப்படுகிறது. முழு உள்ளடக்கமும் பல்வேறு திரும்ப பேசும் பயன்பாடுகளுடன் (Talkback Applications) பொருந்தக் கூடியது. மேலும், இது பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு முழுமையாக அணுகக்கூடியதாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கால அளவு என்ன? இத்திட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: ஏஐ விழிப்புணர்வு (AI Aware) மற்றும் ஏஐ பாராட்டு (AI Appreciate). இரண்டு பிரிவுகளையும் சுமார் நான்கு மணி நேரத்தில் முடிக்க முடியும். திட்டத்தில் அடங்கியுள்ளது என்ன? ஏஐ விழிப்புணர்வு (AI Aware) மற்றும் ஏஐ பாராட்டு (AI Appreciate) என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது: செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தவறான எண்ணங்கள். செயற்கை நுண்ணறிவின் முக்கிய களங்கள் பற்றிய அறிவு - கம்ப்யூட்டர் விஷன் (Computer Vision), நேச்சுரல் லாங்வேஜ் புராசசிங் (Natural Language Processing) மற்றும் ஸ்டாடிஸ்டிக்கல் டேட்டா (Statistical Data); பல்வேறு தொழில் துறைகளில் ஏற்படும் தாக்கங்கள், செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகள். இந்தத் திட்டத்திற்கு தேவைப்படுபவை யாவை? ஸ்மார்ட்போன் (Smart Phone), லேப்டாப் (Laptop) அல்லது டெஸ்க்டாப் (Desktop) மற்றும் 512 kbps குறைந்தபட்ச அலைவரிசை கொண்ட சிறந்த இணைய இணைப்பு ஆகியவையே இந்தத் திட்டத்திற்கான தேவைகள். இத்திட்டத்தை முடித்தவுடன் எனக்கு என்ன கிடைக்கும்? முதலாவதாக, திட்டத்தின் இரு கட்டங்களையும் நிறைவு செய்தால், நீங்கள் செயற்கை நுண்ணறிவு பற்றி மேலும் அறிந்து கொள்வீர்கள். அதுமட்டும் அல்லாமல் இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி உரையாடுவதற்குப் போதுமான நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இது எதிர்காலத்தை உந்தக்கூடிய ஆற்றலாகக் கருதப்படுகிறது. இரண்டாவதாக, நீங்கள் இரண்டு டிஜிட்டல் பேட்ஜ்களின் பெருமை வாய்ந்த உரிமையாளராக ஆகி விடுவீர்கள் - ஏஐ விழிப்புணர்வு (AI Aware) மற்றும் ஏஐ பாராட்டு (AI Appreciate). இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சமூக ஊடகங்களிலும் ஆஃப்லைன் பயன்முறையிலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் என்னை நான் ஒரு செயற்கை நுண்ணறிவு நிபுணர் என்று அழைத்துக் கொள்ளலாமா? செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய ஓர் உலகத்தை நோக்கிய முதல் படியை குடிமக்கள் எடுத்து வைக்க உதவும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எவருக்கும் திறன் / பயிற்சி அளிக்காது மற்றும் யாரையும் செயற்கை நுண்ணறிவு நிபுணர் ஆக்காது. ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை புரிதலையும் அதைப் பற்றி தொடர்பு கொள்வதற்கு போதுமான திறனை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நான் திட்டத்தை முடித்துவிட்டேன். அடுத்த படி என்ன? இந்த திட்டத்திலிருந்து பெறப்பட்ட அறிவின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு ஆய்வு பயணத்திற்கு சுய கற்றல் திட்டத்தை உருவாக்க முடியும். அவர்கள் ஆர்வமுள்ள களத்தைத் தேர்வு செய்து, தங்களுக்கு ஏற்ற வேகத்தில் செயற்கை நுண்ணறிவு கற்றல் பயணத்தைத் தொடங்கலாம். இது அவர்களுக்கு ஆர்வமுள்ள தலைப்பு மூலம் அவர்களை படிப்படியாக முன்னெடுத்துச் செல்லும். ஆதாரம்: அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (AI For All)