ஸ்வதேஷ் உலகின் முதல் பல்முனை மூளை படமிடல் தரவு மற்றும் பகுப்பாய்வு முறையான ஸ்வதேஷ் (SWADESH), உயிரி தொழில்நுட்பத் துறையால் ஹரியானாவில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் (DBT-National Brain Research Centre) உருவாக்கப்பட்டுள்ளது. மூளை மற்றும் நரம்பியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கான பகுப்பாய்வுகளில் கவனம் செலுத்தும் ஒரு தனித்துவமான முயற்சி இதுவாகும். குறிப்பாக இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பல்முனை படமிடல் தரவுத்தளமான இது, பெரிய தரவு கட்டமைப்பு மற்றும் பல்வேறு நோய் வகைகளுக்கான பகுப்பாய்வுகளுடன் ஒரே தளத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்சைமர் நோய் ஆராய்ச்சியை வலுப்படுத்த மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சைகளை விஞ்ஞான சமூகம் கொண்டு வர இது உதவும். மேலும் தகவல்களுக்கு ஸ்வதேஷ் வலைதளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்