ஐ-ஸ்டெம் (I-STEM) வலைதளம் விஞ்ஞான சமூகத்திற்காக “ஒன் நேஷன் ஒன் போர்டல்” என்ற கருத்துடன் உருவாக்கப்பட்ட தேசிய வலைதளம் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வசதிகள் வரைபடம் ஐ-ஸ்டெம் (I-STEM) ஆகும். இதன் நோக்கம் ஆராய்ச்சியாளர்களையும் அவர்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான வளங்களையும் இணைப்பதாகும். இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலக நிதியுதவி பெற்று செயல்படும் ஐ-ஸ்டெம் (I-STEM), ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான வசதிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மிக அருகில் அல்லது விரைவில் கிடைக்கக்கூடிய வளங்களை அடையாளம் காண்பதற்கான நுழைவாயிலாகும். ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் வசதிகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐ-ஸ்டெம் (I-STEM) மூலம் கிடைக்கக்கூடிய வசதிகளை நிபுணர்களின் குழு உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். காம்சல் மல்டிபிசிக்ஸ் (COMSOL Multiphysics) காம்சல் (COMSOL) குழுமத்தால் உருவாக்கப்பட்ட காம்சல் மல்டிபிசிக்ஸ் மென்பொருள் தொகுப்பு (COMSOL Multiphysics Software Suite) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D), கற்றல் (Learning) மற்றும் பயிற்றுவித்தல் (lnstruction) ஆகிய பல்வேறு கணினி உருவகப்படுத்துதல்களுக்கு (Computer Simulations) இன்றியமையாத கருவியாக உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது பொறியியல், உற்பத்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறைகளில் மாதிரி வடிவமைப்புகள், சாதனங்கள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றை உருவகப்படுத்த பயன்படும் மென்பொருள் தொகுப்பு. ஒருவர் தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு மல்டிபிசிக்ஸ் மாடலிங்கை பயன்படுத்துவதோடு, இதன் விளைவாக வரும் மாதிரிகளின் பயன்பாடுகளை இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான வகுப்புகளில் பயிற்றுவிப்பதற்காகவும் பயன்படுத்தலாம். இந்தியாவில் முதன்முறையாக, ஐ-ஸ்டெம் வலைதளம் வழியாக ஆராய்ச்சியாளர்கள் காம்சல் மல்டிபிசிக்ஸ் (COMSOL Multiphysics) மென்பொருள் வசதியை கட்டணம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. ஆதாரம்: ஐ-ஸ்டெம் (I-STEM) வலைதளம் பத்திரிக்கை தகவல் மையம்