இந்தியா ஸ்கில்ஸ் நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி. இது உயர்தரமான திறன்களை நிரூபிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள். தேசிய மற்றும் சர்வதேச திறன் போட்டிகளில் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, உலக தரம் வாய்ந்த திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து, வளர்த்து. வெளிப்படுத்துவதற்கான முதன்மை தளமாக இந்தப் போட்டி விளங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தியா ஸ்கில்ஸ் போட்டியில் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை 63 திறன்களில் தேசிய மேடையில் தங்களது மாறுபட்ட திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இப்போட்டி மூலம் இளைஞர்கள் தங்களின் தொழில்திறன்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. மாவட்ட மாநில, மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு உலகத் திறன் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும். ஸ்கில் இந்தியா டிஜிட்டல் மையம் போர்ட்டலில் வேட்பாளர்கள் போட்டிக்கு பதிவு செய்தல் வெண்டும். இதிலிருந்து முதல்நிலை செயல்முறை மூலம் அடுத்த கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர் . மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டியை ஏற்பாடு செய்வதற்காக இந்தத் தரவு மாநிலங்களுடன் பகிரப்படும். இந்தத் தரவுலிருந்து மாணவர்கள் இந்தியா ஸ்கில்ஸ் தேசிய போட்டிக்கு பட்டியலிடப்படுவர். இந்தியா திறன் 2026-27-ம் ஆண்டிற்கான போட்டி உலகத் திறன் போட்டிகள் (WorldSkills Competition) - ஐச்சி, ஜப்பான் 2028-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் (IndiaSkills Competition) 2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பல பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்ததுடன், உலகத் திறன் போட்டியில் (WorldSkills Shanghai China 2026) தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். வயது வரம்பு: 16 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் (திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும்) விண்ணப்பிக்கலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பொறியியல் (Engineering), பாலிடெக்னிக் (Polytechnic), கலை மற்றும் அறிவியல் (Arts & Science) கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI), திறன் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்கள். போட்டிப் பிரிவுகள் பின்வரும் 6 முக்கியத் துறைகளின் கீழ் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. உற்பத்தி மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் (Manufacturing & Engineering Technology) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information & Communication Technology) கட்டுமானம் மற்றும் கட்டிட தொழில் நுட்பம் (Construction & Building Technology) போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் (Transportation & Logistics) படைப்பாற்றல் கலை மற்றும் பேஷன் (Creative Arts & Fashion) சமூகம் மற்றும் தனிநபர் சேவைகள் (Social & Personal Services) போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியான தமிழ்நாட்டைச் சேர்ந்த https://www.skillindiadigital.gov.in/india-skills-competition பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பிற தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களில் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2026. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்