திறன் இந்தியா டிஜிட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான திறன் மேம்பாடு, பொருத்தமான வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியாவின் திறன்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான டிஜிட்டல் தளமான திறன் இந்தியா டிஜிட்டல் [Skill India Digital (SID)] தளத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. தொழில்துறை தொடர்பான திறன் படிப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் ஆதரவை விரிவுபடுத்துவதால் சிறந்த வாய்ப்புகள் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் லட்சக் கணக்கான இந்தியர்களின் விருப்பங்கள் மற்றும் கனவுகளை இந்தத் தளம் உள்ளடக்கியிருக்கிறது. எஸ்ஐடி (SID) என்பது இந்தியாவின் திறன் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் சூழல் அமைப்புக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாகும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை 4.0 திறன்களில் கவனம் செலுத்தி, திறன் மேம்பாட்டை மிகவும் புதுமையானதாகவும், அணுகக்கூடியதாகவும், மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையால் உந்தப்பட்ட இந்த அதிநவீன தளம், திறமையாளர்களை பணியமர்த்துவதை விரைவுபடுத்துவதற்கும், வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில் முன்னேற்றத்தை எளிதாக்குவதற்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும். டிஜிட்டல் திறன்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக டிபிஐ மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான G20 கட்டமைப்பில் வெளிப்படுத்தப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் தளம் சரியாக ஒத்திசைந்துள்ளது . இது அனைத்து திறன் மற்றும் தொழில்முனைவோர் முன்முயற்சிகளுக்கான ஒரு விரிவான தகவல் நுழைவாயிலாகவும் உள்ளது. இது தொழில் முன்னேற்றம், வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றைத் தேடுவதில் குடிமக்களுக்கான ஒரு மையமாகும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்