தோற்றம் உலகளாவிய நிலையில் அனைத்து வகையிலும் தமிழ் ஆய்வினையும், ஒத்த துறைகளில் ஆர்வமுடைய உலகெங்கணும் உள்ள தமிழ் அறிஞர்களையும் ஒருங்கிணைத்து ஒல்லும் வகையெல்லாம் தமிழ் ஆய்வினைத் தொடரும் நோக்கில் சென்னையில் 1968ஆம் ஆண்டு, சனவரித் திங்களில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தோற்றுவிக்கப்பட்டது. புலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள புலங்களில் உயரிய பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது: தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் அயல்நாட்டுத் தமிழர் புலம் உள்கட்டமைப்பு வசதி / மாணவர் நலன் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய ஆய்வு நூலகம் இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி பட்டியல் / பழங்குடி இனத்தவர் / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பட்டப்படிப்புடன் கூடுதலாக பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் படிக்கும் வசதி ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மற்றும் பல்கலைக்கழக நல்கைக் குழுவால் வழங்கப்படும் தேசிய தகுதித் தேர்வு / மாநிலத் தகுதித் தேர்விற்கான இலவசப் பயிற்சி (NET / SET / CSIR / ICHR) நாட்டு நலப்பணித் திட்டம் விதிமுறைகள் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் பயிற்றுமொழி தமிழாகும். மாணவர்கள் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவற்றை சேர்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப்பட்டியல் அமைக்கப்படும். உயரளவு மதிப்பெண் வரிசையில் தெரிவு செய்யப்பெறும் மாணவர்கள் உரிய கல்வித்தகுதிக்கான மூலச்சான்றுகளையும் அவற்றின் சான்றொப்பமிடப்பட்ட ஒளிப்பட நகல்கள் (ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம்) எடுத்துவர வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக நல்கைக்குழு விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2+3+2 கல்வி படிநிலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பில் மூன்றாம் பருவத்தில் தேர்ச்சி பெற்று, நான்காம் பருவ முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஒட்டு மொத்த தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் அளித்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும். நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தமிழ் முதுகலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி துறையிலுள்ள இடங்களைப் பொறுத்து தமிழக அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம், இடம் ஆகியன தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். மொத்த சேர்க்கைக்கான இடங்கள் மொத்த சேர்க்கைக்கான இடங்கள் - 14 விண்ணப்பக் கட்டணம் பிரிவு ஆய்வியல் நிறைஞர் பொதுப் பிரிவு 300 ஆதிதிராவிடர் / பழங்குடியினர்(சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்) 150 விண்ணப்பிக்கும் முறை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழி பட்டம் பயில விரும்புவோர் www.ulakaththamizh.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள முகவரி வழியாகவும் அல்லது www.tamiluniversity.ac.in என்ற தமிழ்ப் பல்கலைக்கழக (Tamil University, Thanjavur) இணையதள முகவரியில் தரப்பட்டுள்ள இணைப்பு (Link) வழியாகவும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை நிறைவு செய்து விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியாக செலுத்தலாம். (அல்லது) விண்ணப்பக் கட்டணத்தை வங்கி வரைவோலையாக The Registrar, Tamil University, Thanjavur என்ற பெயரில் எடுத்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை நிறைவு செய்து விண்ணப்பத்தினை நகல் எடுத்து இயக்குநர், கல்விநிலை ஆய்வு இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையோடு அனுப்பலாம். அசல் விண்ணப்பத்தினை சான்றொப்பமிடப்பட்ட நகல்களான கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் ஏதேனும் தேவையிருப்பின் அவற்றின் ஒளிப்பட நகலை சொந்தக் கையொப்பம் இட்டு இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைத்து அனுப்புதல் கூடாது. மேலும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு 044-22542992 என்ற தொலைப்பேசி எண்ணிலும் அல்லது இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளவும். கல்விக்கட்டண விவரம் வ.எண் கட்டண விவரம் தமிழ் ஆய்வியல் நிறைஞர் 1 சேர்க்கைக் கட்டணம் 300 2 சிறப்புக் கட்டணம் 300 3 பயிற்றுக் கட்டணம் 2000 4 நூலகக் கட்டணம் 300 5 கணிப்பொறிக் கட்டணம் 150 6 பயிற்சிக் கட்டணம் 500 7 விளையாட்டுப்போட்டி கட்டணம் 100 8 காப்புத்தொகை (திரும்பப் பெறத்தக்கது) 500 9 நூலகக் காப்புத்தொகை (திரும்பப் பெறத்தக்கது) 500 10 இணையதள / அடையாள அட்டை 150 11 பிற பல்கலைக்கழகப் பட்டங்களை ஏற்பதற்கான கட்டணம் 200 மொத்தம் 5000 12 இந்தியாவின் பிற மாநிலப் பல்கலைக்கழகப் பட்டங்களை ஏற்பதற்கான கட்டணம் 1000 13 வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டங்களை ஏற்பதற்கான கட்டணம் 5000 14 வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கைக் கட்டணம் 15000 தொடர்பு கொள்ள முகவரி:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்இரண்டாம் முதன்மைச் சாலைமையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்தரமணி, சென்னை 600113 வலைதளம்: www.ulakaththamizh.inமின்னஞ்சல்: iitstaramani@gmail.comதொலைபேசி: 22542992, 22542781 ஆதாரம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்