இந்திய மொழிகளை கணிணியில் பயன்படுத்துவது என்பது சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஒரு புதுமையான விஷயம். குயில்பேட் மற்றும் லிபிக்கர் தளங்களில் ஆன்லைனில் இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யலாம். முன்னமே பதிவு செய்யப்பட்ட விதிகளின்படி மொழிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தைத் தளங்கள் கொண்டுள்ளன. 'மொழிமாற்றி' எனும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கடினமான கேஸ்-சென்ஸிடிவ் (case-sensitive) விதிகள் இல்லாமல் ('rAShTrbhAShA’ என இல்லாமல் 'rashtrabhasha' என எழுதுவது) பயனாளர்கள் எப்பொழுதும் போல் எளிய முறையில் சொற்களை டைப் செய்யலாம். இம்முறையில் வட்டார மொழியின் ஒலிப்புமுறைக்கு ஏற்றவாறு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு அச்சொற்களை டைப் செய்ய வேண்டும். இதனால் பயனாளர்கள் தாங்கள் அறிந்த வட்டார மொழிகளிலேயே தொடர்பு கொள்ள முடிகிறது. கீழ்க்கண்ட தளங்களில் நுழைந்தபின் நீங்கள் விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். மேலும் பல இணைய தளங்கள் மொழிமாற்றி சேவையை அளிக்கின்றன. http://quillpad.com/ http://www.lipikaar.com/ பதிவிறக்கம் செய்ய எழுத்துருக்கள் இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி திட்டம் (TDIL) இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் இந்திய மொழிகளை கணிணியில் பயன்படுத்தும் வண்ணம் புதிய தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே ஆகும். இதன் மூலம் பல்வேறு இந்திய மொழிகளில் தகவல்களைப் பெற முடியும். மக்கள் பயன்பெறும் வண்ணம் எழுத்துருக்கள் சிடிக்கள் மூலமும் இணைய வழி டவுண்லோட் மூலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. விரும்பிய எழுத்துருக்களை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்க. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? http://www.ildc.in/ தமிழில் தட்டச்சு செய்தல்