uni.medhas.org

பின்வரும் இணைய தொடர்பைப் பயன்படுத்தி ட்ரூ டைப் எழுத்துருவை ஓபன் டைப் எழுத்துருவாக மாற்றிக் கொள்ளலாம். ‘.TXT’ வடிவில் உள்ள ட்ரூ டைப் எழுத்துரு கொண்ட பைலை பதிவேற்றம் செய்க. நீங்கள் பயன்படுத்தும் எழுத்துருவை தேர்ந்தெடுத்த பின் , நீங்கள் புதிதாக விரும்பும் எழுத்துருவை தேர்ந்தெடுங்கள். அது தானாகவே ஓபன் டைப் எழுத்துருவாக (யூனிகோட்) மாற்றிவிடும்.

பத்மா பிளக்-இன்

பத்மா தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய மொழிகளுக்கான எழுத்துரு மூலம் எழுதப்பட்ட பைல்களை இலவச பார்மட்டில் இருந்து உரிமம் பெற்ற பார்மட்டிற்கும், உரிமம் பெற்ற பார்மட்டில் இருந்து இலவச பார்மட்டிற்கும் மாற்றவும் வழிவகை உள்ளது. தற்போது இத்தொழில்நுட்பம் தமிழ், தெலுங்கு, தேவநகரி(மராத்தி உட்பட), குஜராத்தி, பெங்காலி மற்றும் குர்முகி மொழிகளில் உள்ளது.

யூனிகோட் எழுத்துரு எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்படும் வரை உரிமம் பெற்ற எழுத்துரு மற்றும் பொது எழுத்துரு பயன்பாட்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதே பத்மா தொழில்நுட்பத்தின் நோக்கம். இந்திய மொழிகளுக்கான உரிமம் பெற்ற எழுத்துரு பார்மட் மூலம் எழுதப்பட்ட பைல்களை யூனிகோட் வடிவில் மாற்றுகிறது. மேலும் இஸ்க்கி மற்றும் மொழிமாற்று உத்திகளான ஐட்ரான்ஸ் & ஆர்.டி.எஸ் (தெலுங்கு மட்டும்) முதலியவற்றையும் இது கொண்டுள்ளது. இந்த பிளக்-இன்னை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்க https://addons.mozilla.org/en-US/firefox/addon/873