நெறி ஊடுருவாளர் / பாதுகாப்பு பகுப்பாய்வாளர் (Ethical Hacker / Security Analyst) கணினி தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருவது போலவே, அவ்வளர்ச்சிக்கு இணையாகவும், அதற்கு எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், கணினியின் மென்பொருளில் ஊறு செய்யும் மாற்றங்களை ஏற்படுத்துதல், கடவுச் சொற்களை தவறான வழிகளை பயன்படுத்தி தரவுகளை தெரிந்து கொள்ளுதல், அடிப்படைத் தரவுகளில் மாற்றங்களை செய்து குழப்பத்தை விளைவித்தல், பணப் பறிமாற்றத்தில் குளறுபடிகள் செய்தல், நச்சு நிரல்களை (Virus) உட்செலுத்தி கணினி செயல்பாட்டை அடியோடு சீர்குலைத்தல் போன்ற செயல்களும் வளர்ந்து வருகிறன. சில நேரங்களில் விளையாட்டிற்காக மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காகவும், மற்றவர்களுக்கு அதனை காண்பித்து பெருமை தேடிக் கொள்ளுவதற்காகவும், சில நேர்வுகளில் அதனை வேறு வழியில் பயன்படுத்துவதற்காகவும் கணினி மென்பொருளை ஊடுருவி மேற்படி பணிகளை மேற்கொள்கின்றனர். அத்தகைய கேடுகளைச் செய்ய விடாமல் தடுப்பது மற்றும் வருமுன் காக்கும் பணிகளை மேற்கொள்பவர்களே “நெறி ஊடுருவாளர் / பாதுகாப்பு பகுப்பாய்வாளர் (Ethical Hacker / Security Analyst)”. இப்பணியானது கணினி தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய சவால்கள் நிறைந்த பணியாக இருந்து வருகிறது. இந்தியாவின் NASSCOM, அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் 77000 Ethical Hacker பணியிடங்களுக்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கிறது. இப்பணி பற்றிய விரிவான தகவல்களை இச்சிற்றேட்டின் வழி அறியலாம். தொழில் துறை கணினி மற்றும் கணினி செயல்பாடு சார்ந்தது. பணியின் விளக்கம் கணினி மென்பொருளில் மாற்றங்களைத் தடுத்தல், அங்ஙனம் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களைச் சரி செய்தல், தரவுகளின் மெய்த்தன்மையைப் பாதுகாத்தல், மென்செயலிகளின் திருட்டைத் தவிர்த்தல், இழந்த தகவல்களை மீட்டல், இணைய வழி குற்றச் செயல்பாடுகளில் தடயவியல் நிபுணராகப் பணியாற்றுதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் சிறப்புப் பணிகளையும் செய்யலாம். சந்தைபடுத்துதலும் மேலாண்மையும் (Marketing and Management) தகவல் பாதுகாப்பு (Information Security) பயன்பாடு பாதுகாப்பு (Application Security) சந்தைபடுத்துதலும் மேலாண்மையும் (Marketing and Management) தற்போது வேகமாக வளர்ந்து வரக் கூடிய நேரலை வர்த்தகத்தில் பல்வேறு மென்பொருள்கள் மிக இன்றியமையாத பங்காற்றுகின்றன. இத்தகைய வர்த்தகத்திலும் அதன் மேலாண்மையிலும் ஊடுருவாளரின் பணி மகத்தானது. கீழே குறிப்பிட்டுள்ள பணிகளைச் செய்யலாம்: Certified Secure Computer User Fundamentals of Project Management (FPM) Customer Relationship Management (CRM) Project Management (PM) Project Management in Information Technology Security (PMITS) தகவல் பாதுகாப்பு (Information Security) வருமுன் பாதுகாப்பு என்பது உடல் நலத்தில் மட்டுமல்லாது அனைத்திலும் மிக முக்கியமாகிறது. கணினியில் சேகரித்து வைத்திருக்கக் கூடிய தகவல்கள், தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு என்பது அதன் செயல்பாட்டினை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது. இதில் அதிக அளவில் பணி வாய்ப்புகளை அளிக்கக் கூடிய தகவல் பாதுகாப்பு பிரிவில் அடிப்படைக் கல்விகளான Fundamentals of Network Security (FNS) Fundamentals of Information Security (FIS), Fundamentals of Computer Forensic (FCF) பயின்றவர்கள் கீழ்காணும் பணிகளில் ஈடுபடலாம்: Certified Network Defender (CND) Certified Ethical Hacker (CEH) Council Certified Virtualization Professional (ECVP) EC-Council Certified Disaster Recovery and Virtualization Professional (DRVT) Computer Hacking Forensic Investigator (CHFI) EC-Council Certified Security Analyst / Licensed Penetration Tester (ECSA / LPT) EC-Council Certified Encryption Specialist (ECES) Designing and Implementation Cloud Security செயலி பயன்பாடு பாதுகாப்பு (Application Security) கணினியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு செயலி உதவுகிறது. அச்செயலிகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களால் மிகப் பெரிய வேறுபாடுகளை உண்டு பண்ணலாம். அதை தடுப்பதும் ஊடுருவாளர்களால் மேற்கொண்ட கேடுகளைச் சரி செய்வதுமே செயலி பயன்பாடு பாதுகாப்பு பணியாளரின் பணிகளாகும். இப்பணியைச் செய்ய Certified Secure Programming Course என்ற சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதனைப் படித்த பிறகு கீழ்காணும் பணிகளில் ஈடுபடலாம்: EC-Council Certified Secure Programming-WEB (ESCP WEB) EC-Council Certified Secure Programming-JAVA (ESCP JAVA) EC-Council Certified Secure Programming-C/C++ (ESCPC/C++) EC-Council Certified Secure Programming-NET (ESCP-NET) பணிச் சூழ்நிலை இப்பணியினை முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ மேற்கொள்ளலாம் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். மற்ற கணினி பணி செய்பவர்களைக் கண்காணித்தல் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். வேலை நேரம் குறைந்த பட்சம் 9 மணி நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும். இப்பணி மாற்றுத் திறானாளிகளுக்கு உகந்தது. கல்வித் தகுதிகள் மற்றும் அக்கல்வியை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் பத்தாம் வகுப்பு முடித்து நேரடியாக கணினி பாடப் பிரிவில் பட்டயப் படிப்பு அல்லது மேல்நிலை கல்விக்குப் பின் இளங்கலை முதுகலை அறிவியல் அல்லது பொறியியல் பட்டப் படிப்பில், கணினி பாடப் பிரிவை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்து விட்டு பின் ”EC-Council” என்ற நிறுவனம் அளிக்கும் நெறி பணியிடத்திற்கான சான்றிதழ் படிப்புகளைப் படிக்க வேண்டும். இந்நிறுவனம் உலக அளவிலும் இந்திய அளவிலும் ”EC-Council” என்ற பெயரில் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. University Courses (After HSC) DCA Diploma in Computer Application / DCS Diploma in Computer Science Advanced Diploma in Information Security / Advanced Diploma in Computer Application Bachelor of Information Security / Bachelor of Computer Application / B.E. / B.Tech. Computer Science Master of Security Science Certified Ethical Hacker Computer Hacking Forensic Investigator Certified Security Analyst Master of Cyber Security மேலும், மேற்கண்ட EC-Council என்ற நிறுவனம் இந்தியாவில் நெறி ஊடுருவாளர் பணியிடத்திற்கான பலவகையான சான்றிதழ் படிப்புகளைத் தருகிறது. அத்தகைய படிப்புகளை முடித்த பின் கணினித் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். முக்கிய திறன் தேவைகள் அடிப்படைத் தகுதிகள் பல்வேறு கணினி மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல் வேண்டும் (C, C++, Perl, Python, and Ruby) பற்பல வலைபயன்பாடு குறித்த தெளிந்த அறிவு மிகவும் அத்தியாவசியம் (Microsoft .NET and PHP) இருமை மொழியில் புலமை (Binary Language) Microsoft Windows, Various Versions of Linux, etc. போன்ற இயக்க முறைமைகளில் தெளிந்த அறிவு TCP/IP protocols such as SMTP, ICMP and HTTP ஆகிய நெறிமுறைகள் பற்றிய அடிப்படை ஞானம் எந்த சூழ்நிலையிலும் ஒத்துப் போகும் தன்மை விரும்பக் கூடிய திறன் தேவைகள் அறிவு, திறன் மற்றும் திறமை ஆகியவற்றை ஒருங்கே பயன்படுத்தக் கூடிய ஆற்றல், புதிர்களை விடுவிப்பதில் ஆர்வம், விவேகமாக சிந்தித்தல் ஆகியவை. தொழில் வளர்ச்சிப் பாதை மற்றும் வேலையளிப்பவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மென்பொருள் வடிவில் தகவல்களை சேகரித்து வைத்து பராமரிக்கும் அரசு தனியார் நிறுவனங்கள், தானியங்கி சேவைகளைத் தரும் அமைப்புகள், இராணுவம், போக்குவரத்து போன்ற எண்ணற்ற துறைகளில் நெறி ஊடூருவாளர் / பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களுக்கான (Ethical Hacker / Security Analyst) வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றது. அரசு துறையைப் பொறுத்த வரை இணைய வழி குற்றச் செயல்களைக் கண்டறியும் தடயவியல் நிபுணராகும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறவும் இயலும். கீழ்காணும் பல்வேறு வகையான பணிகளையும் மேற்கொள்ளலாம். Infrastructure Management Services (IMS) Certified Ethical Hacker Computer Hacking Forensic Investigator EC-Council Certified Security Analyst Licensed Penetration Tester EC-Council Network Security Administrator EC-Council Certified Incident Handler EC-Council Certified Security Specialist EC-council Certified Disaster Recovery Professional Chief Information Security Officer Certified Secure Computer User IT Forensics Application Security, Risk Management, Audit and Compliance Incident Management BCP Manager DR Network Security. Team Lead Network Security Engineer Information Security Analyst Security Engineer Penetration Tester Security Analyst Information Security Engineer Security Consultant (Computing / Networking / Information Technology) மேலும் துப்பறியும் நிபுணராகவும் சுயதொழிலில் ஈடுபடலாம். தேவையான அனுபவம் முன் அனுபவம் கூடுதல் ஊதியத்தை பெற்றுத் தரும். ஊதியம் மாதத்திற்கு ரூ. 16000 - ரூ. 100000 ஆதாரம்: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை