டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள் துருவனின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் - மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன் கயிலை மலையை அசைக்க முயலும் ராவணனின் சிற்பம் யாரால் உருவாக்கப்பட்டது - ராஷ்டிரகூடர்கள் தசாவதாரச் சிற்பம் யார் காலத்தில் எழுப்ப்பட்டது - ராஷ்டிரகூடர்கள் பிற்காலச் சோழர்களின் காலம் - 850 - 1200 பிற்காலச் சோழர்களின் தலைநகரம் - தஞ்சாவூர் பிற்காலச் சோழர்களின் ஆட்சியை புதுப்பித்தவர் - விஜயாலயச் சோழன் பிற்காலச் சோழர்களின் உயர்வுக்குக் காரணமாணவர் - முதலாம் பராந்தகச் சோழன் பிற்கால சோழர்களின் வலிமைமிக்க அரசன் - ராஜராஜ சோழன் முதலாம் பராந்தகச் சோழகன் ஆண்ட காலம் - 907 - 955 மதுரை கொண்டான் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் - முதலாம் பராந்தகச் சோழன் பராந்தகனின் மகன் கொல்லப்பட்ட இடம் - தக்கோலம் முதலாம் பராந்தகன் போரிட்ட ராஷ்டிரகூட அரசன் - மூன்றாம் கிருஷ்ணன் ராஜராஜனின் தந்தை - இரண்டாம் பராந்தகன் ராஜராஜன் சேர நாட்டுக் கடற்படையை வென்ற இடம் - காந்தளூர் ராஜராஜனுக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் - ராஜசேகர் அருண்மொழி என சிறப்பித்து அழைக்கப்பட்டவன் - ராஜராஜன் மும்முடிச்சோழன் என அழைக்கப்பட்டவர் - ராஜராஜன் ராஜராஜன் கடலில் உள்ள எந்தப் பகுதியைப் போரில் வென்றான் - மாலத்தீவுகள் தஞ்சை பெறிய கோவிலைக் (பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் - ராஜராஜன் ராஜராஜன் புத்த மடாலயம் கடட உதவிய இடம் - நரகப்பட்டினம் முதலாம் ராஜேந்திரனின் காலம் - 1012 - 1044 கங்கை கொண்டான் என அழைக்கப்பட்டவன் - முதலாம் ராஜேந்திரன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் - ராஜேந்திரன் முதலாம் ராஜேந்திரன் வெற்றி கண்ட வங்காள மன்னன் - மஹிபாலன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டிக் கங்கை நீரைக் கலந்தவன் - ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தைத் தோற்றுவித்தவன் - முதலாம் ராஜேந்திரன் தஞ்சை பெரிய கோவில் - சிவன் கோவில் குலோத்துங்கன் தன் மகளை மணம் செய்து கொடுத்தது - இலங்கை மன்னன் விஜயபாகுவிற்கு கலிங்கப் போருடன் தொடர்புடையவன் - குலோத்துங்கன் குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப்பைப் பாடும் இலக்கியம் - கலிங்கத்துப் பரணி விஜயாலயச் சோழன் ஆண்ட காலம் - 850 - 880 விஜயாலனுக்குப் பின் அரசாண்டவன் - மகன் ஆதித்தியன் ஆதித்திய சோழன் வெற்றிகண்ட பல்லவ அரசன் - அபராஜிதன் சேக்கிழார் இயற்றிய நூல் - திருத்தொண்டர் புராணம் திருத்தொண்டர் புராணத்தின் மரு பெயர் - பெரிய புராணம் பெரிய புராணத்தில் இடம் பெறுவது - நாயன்மார் வரலாறு கம்பர் யாருடைய அவையிலிருந்தார் - இரண்டாம் குலோத்துங்கன் ஒட்டக்கூத்தரும் புகழேந்திப் புலவரும் அலங்கரித்த அரசவை யாருடையது - இரண்டாம் குலோத்துங்கன் சோழப்பேரரசை வெற்றி கொண்டவர்கள் - ஹோய்சாளர், காகதியர்கள் சோழப் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது - மண்டலம் மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன் - கோட்டம் கோட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டது - நாடு அல்லது மாவட்டம் சோழர்களின் முக்கிய வருவாய் - நிலவரி கிராமசபை, வாரியங்களின் உறுப்பினர்கள் எம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் - குடவோலை முறை சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை - கப்பல் படை கப்பல் படைத்தலைவர்கள் எவ்வாங் அழைக்கப்பட்டனர் - நாயகர், சேனாதிபதி, மகாதண்ட நாயகர் சோழர் காலத்தில் வருமானம் பெற்றுத்தரும் வணிக முறை - உள்நாட்டு வணிகம் பிற்காலப் பாண்டியர்களின் காலம் - கி.பி.1200 - 1300 பாண்டியர்களின் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தியவர் - கடுங்கோன் கடுங்கோனுக்குப்பின் அரசனான பாண்டியன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி