டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்

குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்

ஹர்ஷர் காலத்தில் வருகை புரிந்த சீன யாத்தீரிகர் - யுவான்சுவாங்

சமுத்திரகுப்தரை அறிய உதவும் கல்வெட்டு - அலகபாத் கல்தூண் கல்வெட்டு

பாராந்தகச் சோழரை அறிய உதவும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

ரோமானியர் வழங்கிய மாபெரும் நன்கொடை - குடியரசு தத்துவம்

தட்சசீலம் எதற்கு எடுத்துக்காட்டு - காந்தரக் கலை

மராட்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் - நிர்வாக குறைபாடு

பாபரின் படையெடுப்புகளை கால வரிசைப்படி குறிப்பிடுக - முதல் பானிபட் போர், கான்வா போர், சந்தேரிப் போர், கோக்ரா போர்

கந்தர்வ வேதத்தை இயற்றியவர் - பரத முனிவர்

சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்த சாஸ்திரம்

மவுரியர்களின் ஆட்சியை அறியத் தரும் நூல் - அர்த்த சாஸ்திரம்

காஷ்மீர் வரலாற்றை அறிய உதவும் நூல் - ராஜதரங்கினி

ராஜதரங்கிணியை இயற்றிய ஆசிரியர் - கல்ஹாணர்

சந்திர குப்த மவுரியர் காலத்தில் இந்தியா வந்த அயல்நாட்டு யாத்திரிகர் - மெகஸ்தனிஸ்

கிமு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன - மகாஜனபதங்கள்

ரோமபுரிக்கும் தமிழகத்திற்கும் வாணிகத் தொடர்பு இருந்தமையை உணர்த்தும் நாணயம் - அரிக்மேட்டில் கிடைத்த நாணயம்

ஆரியர்களின் பூர்வீகம் - மத்திய ஆசியா

இந்தியா மீது படையெடுத்து வந்த கிரேக்க வீரன் - மாவீரன் அலெக்சாண்டர்

அலெக்சாண்டரை எதிர்த்த இந்திய மன்னன் - புருஷோத்தமன்

விந்தியமலைக்குத் தெற்கில் அமைந்துள்ள பகுதி - சாத்பூரா மலைகள்

வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை பிரிக்கும் மலை - விந்தியமலை

தக்காண பீடபூமிக்குத் தெற்கில் உள்ள பகுதி - தமிழகம்

அரேபியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - யவனர்

இந்தியாவில் பூர்வீகமானவர்கள் - திராவிடர்

சிந்து சமவெளி நாகரீகத்தை அறிய உதவும் அகழ்வாராய்ச்சி - மொகஞ்சாதாரோ - ஹரப்பா ஆராய்ச்சி

தென்னக வரலாற்றை அறிய உகவும் அகழ்வாராய்ச்சி - அரிக்கமேடு ஆராய்ச்சி

கைபர்- போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் - ஆரியர்கள்

இந்தியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கணவாய் - கைபர் - போலன் கணவாய்

மூவேந்தர்களுடன் தமிழகத்தை ஆண்ட மற்றொரு வேந்தன் - பல்லவர்கள்

இந்தியாவின் இயற்கை அரண் - இமயமலை

புத்தர் எங்கு மறைந்தார் - குசி நகரம்

அமிர்தசரஸ் நகரை நிறுவியவர் - குரு ராம்தாஸ்

ராஷ்டிரகூடர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு - சிவபெருமானின் நடன உருவம்

ராஷ்டிரகூடர் தலைநகர் மான்யகேதாவில் கட்டிய ஆலயம் - உலகேஸ்வரன், தசாவதாரக் கோவில்கள்

ராஷ்டிரகூட இளவரசியை மணந்த சோழ அரசன் - ஆதித்தியன்

ராஷ்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கரகர்

ராஷ்டிரகூடர்களின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுற்றது - 973-ல்

ராஷ்டிரகூட வேந்தன் இரண்டாம் கரகரைத் தோற்கடித்த சாளுக்கிய வேந்தர் - இரண்டாம் தைலா

ராஷ்டிரகூடர்களின் தலைநகர் - மான்யகேதம்

ராஷ்டிரகூடர்களின் முதல் அரசன் - தந்திதுர்க்கன்

தந்திதுர்க்கனின் மாமன் - முதலாம் கிருஷ்ணன்.

தந்திதுர்க்கன் தோற்கடித்த சாளுக்கிய அரசன் - கீர்த்திவர்மன்

தந்திதுர்க்கன் முதலில் எத்தகைய பணியாற்றினார் - வேலைக்காரர்

தந்திதுர்க்கனுக்குப்பின் அரச பொறுப்பை ஏற்றவர் - மாமன்

முதலாம் கிருஷ்ணன் கட்டிடக்கலைக்கு நல்ல சான்று - எல்லோரா - கைலாசநாதர் கோவில்

முதலாம் கிருஷ்ணன் தோற்கடித்த மன்னன் - இரண்டாம் கீர்த்திவர்மன்

முதலாம் கிருஷ்ணன் காலம் - 757 - 775

இரண்டாம் கோவிந்தன் திறமையற்றவராக விளங்கியதால் ஆட்சியைக் கைப்பற்றியவர் - சகோதரர் - துருவன்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி