டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

இந்தியாவில் லோடி பேரரசு முடிவுக்கு வர காரணமான போர் - பானிபட் போர்

பானிபட் போர் நடந்த ஆண்டு - 1526

பானிபட் போருக்குப்பின் தோன்றிய அரசு - முகலாயப் பேரரசு

பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் - இப்ராஹிம் லோடி

நிலங்களைத் தானமாக வழங்கும் முறைக்குப் பெயர் - ஜாகிர் முறை

முகமதியர் அல்லாதவர் மேல் விதிக்கப்பட்ட வரி - ஜிஸ்யா வரி

சுல்தானிய ஆட்சி முறை என்பது - இந்திய, பாரசீக, துருக்கிய ஆட்சிமுறைகளின் கலவை.

சுல்தானுக்கு ஆலோசனை வழங்க எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் - 4 முதல் 6

இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலமாக்கள்

சுல்தான்களின் நாடு எவ்வாறு பரிக்கப்பட்டது - மாநிலம்

மாநிலத்தின் பொறுப்பாளர் யார் - ராணுவ ஆளுநர்

மாநில அளவில் நீதி வழங்கும் பணியைச் செய்தவர் - காஸி

சுல்தான்கள் அரசின் முதன்மையான வரி - நில வரி

முஸ்லீம்கள் மீது விதிக்கப்பட்ட நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - உஷர்

இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட நிலவரி - கிராஜ்

சமயவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - ஜிஸ்யா

நீதிவழங்குவதில் அரசருக்கு ஆலோசனை கூறியவர்கள் - காஸிகள்

பல கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு வழங்கப்பட்டது - பர்கானா

சுல்தானின் ஆட்சிக் காலம் - 1206 - 1526

தில்லி சுல்தானியத்தை ஆண்ட வம்சங்கள் எத்தனை - 5

சுல்தானியர்கள் காலத்தில் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன - 4

தில்லி சுல்தான்களின் அரசுக்கு எதிராக உருவான இயக்கம் - பக்தி இயக்கம்

பக்தி இயக்கத்தினால் வளர்ந்தது - சூபிசம்

ராமனுஜர் காலம் - கி.பி. 12-ஆம் நூற்றாண்டு

ராமானுஜரின் கொள்கை - விஜிஸ்டாத்துவைதம்

முக்தியை அடையும் வழியாக கூறியது - பக்தி

ராமனுஜரின் வழித்தோன்றல் - ராமானந்தர்

ராமானந்தரின் சீடர் - கபீர் தாசர்

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற கிருஷ்ண பக்தர் - வல்லபாச்சாரியர்

பக்தி இயக்கத்தின் தலை சிறந்த வித்தகர் - சைதன்யர்

ராமனும் ரஹீமும் ஒருவரே என்றவர் - கபீர்

சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் - குருநானக்

சீக்கியர்களின் புனித நூல் - ஆதிகிரந்தம்

பக்தி நெறி பரப்பிய நாமதேவர், ஏகநாதர், துக்காராம் ஆகியோர் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மஹாராஷ்டிரா

ராஜஸ்தானில் ஆடம்பர வாழ்வைத் துறந்து கிருஷ்ணபக்தையானவர் - மீராபாய்

சூபிகள் யார் - பாரசீகத்திலிருந்து வந்த இஸ்லாமியத் துறவிகள்.

சூபிகளின் பக்திப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன - கவாலிகள்

ஆஜ்மீரில் வாழ்ந்த புகழ்பெற்ற சூபி துறவி - நிசாமுதீன் அவுலியா

சுல்தான்களின் காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்புகளின் ஒன்று - பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ்

சுல்தான்களின் காலத்தில் தோன்றிய புதிய மொழி - உருது

சுலல்தான்களின் காலத்தில் தோன்றிய இசை - இந்துஸ்தானி இசை

இந்துஸ்தானி இசையைப் பரப்பியவர்கள் - சூபிகள்

குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - சுல்தான்கள்

கிதார் என்னும் இசைக் கருவி யார் காலத்தில் பழக்கத்திற்கு வந்தது - சுல்தான்கள்

தில்லியில் உள்ள அழகு வாய்ந்த கல்லறையில் யாருடையவை - லோடி வம்சத்தினர்

பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா

பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு - 1347

பாமினிப்பேரரசின் தலைநகர் - தக்காணத்திலுள்ள குல்பர்கா

பாமினிப் பேரரசு உட்பகுப்பு முறைக்குப் பெயர் – ஜாஹிர்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி