டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

"புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து

பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்

எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா

இந்தியாவின் முதல் மாநில பெண் முதல்வர் - சுதேசா கிருபாளினி

ஜப்பானில் தோற்றுவிக்கப்பட்ட தனிமனித தற்காப்புக் கலை - ஜூடோ

அமெரிக்கா சுதந்திர போராட்ட வீரர் - ஜார்ஜ் வாஷிங்டன்

புத்தர் பிறந்த இடம் - லும்பினி்

இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1950

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் - ராஜ்ய சபாவின் தலைவர்

நமது அரசியலமைப்பின் இதயமாகவும், உயிராகவும் கருதப்படுவது - நீதி பரிகார உரிமை

மத சார்பற்ற அரசு என்பது - மத விஷங்களில் பொதுவான தகுதியை வகிப்பது.

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணை குடியரசுத் தலைவர்

இந்தியாவின் வாக்களிக்க தகுதியுடைய வயது - 18

இந்திய அரசியலமைப்பின்படி - சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதியை ஒட்டு மொத்தமாகக் கோரலாம்.

இந்திய குடியரசுத் தலைவர் - தெரிவு செய்யும் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

"வந்தே மாதரம்" எனும் பாடல் இடம் பெரும் நூல் - ஆனந்த மடம்

"ஆனந்த மடம்" நூல் ஆசிரியர் - பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஆன்மிக சபையின் தலைவர் - அன்னி பெசன்ட்

ஜனாதிபதி ஆட்சி முறை நடைபெறும் நாடு - அமெரிக்க ஐக்கிய நாடுகள்

இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமுல்படுத்தப்பட்ட மாநிலம் - பஞ்சாப்

அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை - 10

குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பஞ்சாயத் ராஜ்யம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது - ராஜஸ்தான்

மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சிறந்த விளையாட்டு வீரர் - இராமநாதன் கிருஷ்ணன்

தேசிய சேவை திட்டத்தின் குறிக்கோள் - சேவை மூலம் சுய முன்னேற்றம்

சமஸ்தானங்களின் இணைப்பிற்குத் காராணமானவர் - வல்லபபாய் படேல்

மது விலக்கு எதன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது - மாநிலம்

இந்தியாவின் வர்த்தக வங்கிகள் எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டன - ஜூலை.1969

உண்டி என்பது - பிரமசரி நோட்டு

இந்திய காகிதப் பணம் யாரால் வெளியிடப்படுகிறது - ரிசர்வ் வங்கி

இந்திய மக்கள் பெரிதும் பயன்படுத்தும் விலங்கு - ஆடுகள்

நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வந்தவர் - காரன்வாலிஸ் பிரபு

இராஜ்யசபையின் தலைவர் - குடியரசு துணைத்தலைவர்

இந்திய மாநிலங்கள் கண்டிப்பாக மைய அரசின் அயல் நாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களவையின் அவைத்தலைவர் - மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் கீழவை மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரம் பெற்றிருக்கிறது.

வரவு செலவுத்திட்டம் என்பது - வரவு செலவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

"கேசரி" என்பது - சஞ்சரிக்கை

குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதை நிரப்புவது - துணை குடியரசுத் தலைவர்

இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தவர் - ராஜாராம் மேகன்ராய்

சிப்பாய்க் கலகம் அழைக்கப்படுவது - முதல் விடுதலைப் போர்.

"இந்தியா இந்தியர்களுக்கே" என்றவர் - அன்னிபெசன்ட்

நாட்டின் ஐக்கியத்திற்கு ஆங்கில மொழி புகுத்தப்பட்டமையே காரணம் எனக் கூறியவர் - சரோஜினி நாயுடு

தற்கால வங்காள நாட்டுப்பற்றின் வேதமாக விளங்குவது - வந்தே மாதரம்

இந்திய அரசர்கள் என்ற முறையில் ஆங்கிலேயர் பின்பற்றிய முறை - பிரித்தாளும் முறை

ஆங்கில வைசிராய்களின் முக்கிய குறிக்கோள் - ஆதிக்கக்கொள்கை

இந்தியாவில் அதிக மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் - மும்பை

ஆன்மிக சபையை நிறுவியவர் - ஆல்காட் அம்மையார்

ஆன்மிக சபையின் தலைமை இருப்பிடம் – சென்னை

ஆதாரம் : தினமணி