டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கற்கட்டடக்கலை தொடங்கியது - பல்லவர் காலத்தில்

ஓலைச்சுவடிகளில் இருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்த மன்னன் - ராஜராஜசோழன்

தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி

வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி - கோக்கல் பூச்சி

ஆமைகளை பிடிப்பதற்காக பயன்படும் மீன் - ஸக்கர் மீன்

பிரிட்டனின் மிகப்பெரிய கலைவிருது - டர்னர் பரிசு

இந்தியாவில் குங்குமப்பூ அதிகம் கிடைக்கும் இடம் - காஷ்மீர்

தமிழகத்தில் குடைவரைக் கோயில் அமைத்த முதல் மன்னர் - முதலாம் மகேந்திர வர்மன்

முதன் முதலில் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்ட இடம் - பாரிஸ்

கறுப்பு நிறத் தந்தங்களை உடைய யானைகளை காணப்படும் நாடு - ஆப்பிரிக்கா

தேனீக்களை மட்டும் தின்று உயிர்வாழும் பறவை - ராக்கட் பறவை

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந்துறை

ஓர் மரத்தை தன் பற்களால் முறிக்க வல்ல விலங்கு - பீவர்

பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் - பேபேஸி

எளிய வகை நிலவாழ் தாவர வகை - பிரையோபைட்டுகள்

அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ஜெலிடியம்

மின்னல் என்பது மின்சாரக் சக்திதான் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர் - பெஞ்சமின் பிராங்க்ளின்

நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் புஷ்னல்

போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரி - அமீபா

பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது - எண்டோசைட்டோசிஸ்

மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம் - ஹைட்ராங்கியா மேக்ரோபைலா

உயிரியல் துப்புரவாளர் என்பது - பாக்டீரியா

நரம்பு செல்லின் வடிவம் - முட்டை

ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு - ஈஸ்ட்

எது கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது - இன்சுலின்

புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S

உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைப் பெற்றுள்ள நுண்ணுயிரி - வைரஸ்

வைரஸை சூழ்ந்துள்ள புரத உறை - காப்ஸீட்

தலைப்பேனை நீக்க பயன்படும் மருந்து - அசாடிராக்டின்

இரத்த தட்டை அணுக்கள் எதற்கு உதவுகிறது - இரத்தம் உறைதல்

தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக் கடத்துதல்

முட்டைக்கோசின் அறிவியல் பெயர் - பிராசிக்கா ஓலரேசியா

மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு - டைகாட்டுகள்

அதிக வண்டல் மண் டெல்டா பகுதியில் படிகிறது.

சமையல் வாயுவில் அடங்கியது - பூடேன்

பாதரசத்தின் தாதுப்பொருள் - சின்னபார்

டர்பன்டை மரத்திலிருந்து கிடைப்பது - பைன்

ஈர்ப்பு சக்தி தூரிதப்படுத்துவது பூஜ்ஜியம் எதில் - பூமியின் மையத்தில்

மோனசைட் கிடைக்கும் மாநிலம் - கேரளா

ஹைட்ரா என்பது - கொய்லெண்டிரேட்

வண்ணத்துப்பூச்சி உதவுவது - மகரந்த சேர்க்கை உண்டு பண்ணுவதற்கு

உணவை பாதுகாக்கப் பயன்படுத்தும் பொருள் - சோடியம் பென்சோட்

செயற்கை மழையை உண்டுபண்ண உபயோகிக்கும் ரசாயனப் பொருள் - சில்வர் அயோடைடு

ஒலி அலைகள் காற்றில் - நீளமாக செல்கிறது.

மின்மாற்றியை அதிகரிக்கும்போது அதிகரிப்பது - மின் ஒட்டமும், மின் இயக்கும் விசையின் அளவும்

சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது - ஹைட்ராக்சைட் உருவாகிறது.

ஹைட்ரஜன் சல்பைட் வாயுவை எதன்மேல் செலுத்தி உலரவைக்கலாம் - வீரியமிக்க சல்பியூரிக் அமிலம்

உடலிருந்து வெப்ப நாட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு - தோல்

திராட்சையிலிருக்கும் சர்க்கரை - குளுக்கோஸ்

கதிர்வீச்சுகளில் மிக்க குறைந்த ஆபத்து உடையது - குறுகிய ரேடியோ அலைகள்

ஆதாரம் : மனித நோயம் அறக்கட்டளை