டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்

இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்

இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவைப்படுவது - இரும்பு

மாலுமிகளின் திசைக்காட்டியில் பயன்படுவது - காந்தமாக்கப்பட்ட இரும்பு

மிகப் பிரகாசமான கிரகம் - சுக்கிரன் (Venus)

நிக்கோடின் என்ற விஷப்பொருள் எதில் உள்ளது - புகையிலை

ஹீலியம் - உலோகமற்றப் பொருள்

கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய - குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.

கண்ணுக்குள் செல்லும் ஒளி அளவை ஒழுங்குப்படுத்துவது - ஐரிஸ்

இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்

ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்தவர் - வாக்ஸ்மான்

திட கார்பன்-டை-ஆக்சைடு என்பது - உலர்ந்த ஐஸ்

பைசென்டினெரி என்பது - 200 ஆண்டு

பாம்பிற்கு காணப்படாதது - புற உறுப்புகள்

ஒரு குரோஸ் என்பது - 144 எண்ணிக்கை

திமிங்கலம் ஒரு - பாலூட்டி

டாலமைட் - மக்னீசியத்தின் தாதுப்பொருள்

ஒலியைப் பரப்ப டேப்ரிகார்டரில் பயன்படுவது - மாக்னெடிக் நாடா

இரும்பு ஆணி எதில் மிதக்கிறது - பாதரசம்

கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - சின்கோனா

காற்றில் தீப்பற்றக் கூடிய மூலப் பொருள் - வெண்பாஸ்பரம்

எந்தச் செடி உணவை தண்டில் சேமிக்கிறது - இஞ்சி

வண்ணப்படுத்த பயன்படும் அமிலம் - அசிடிக் அமிலம்

பட்டுத் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ககூன்

வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சக்தியை எப்படி கணக்கிடப்படுதல் வேண்டும் - கிலோவாட் மணிக்கு

வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி - வேர்

வைட்டமின் கண்டுபிடித்தவர் - பங்ஸ் (Funks)

உடலில் உஷ்ணம் காண கிளினிகல் தர்மா மீட்டரில் கணக்கிடுவது - சென்டிகிரேட்

காயம் நீல நிறமாக இருக்க காரணம் - காற்றின் மூலக்கூறுகள் சூரிய ஒளியைப் பரப்புகின்றன.

நம் கண்கள் - நிறங்களுக்கு மிகவும் நுட்பமாக உணவூட்டத் தக்கது. - சிகப்பு

ஒலியின் வேகம் மிக நீளமுடையது - காற்றில்

ஒரு லிட்டர் என்பது - 1000 மி.லி

ஹார்டுவேர் என்பது - கம்ப்யூட்டருடன் தொடர்புடையது

B.C.G எதனைத் தடுக்க உதவுகிறது - காசநோய்

மணலின் ரசாயனப் பெயர் - சிலிகன்-டை-ஆக்ஸைட்

சோனார் - நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிய பயன்படுகிறது.

உடல் வளர்ச்சிக்கு அதிக சக்தியை தருவது - புரதம்

பூச்சிகளைத் தின்னும் தாவரம் - ட்ரோசரா

பாலூட்டும் பிராணி எது - வெளவால்

இசைகள் பசுமையாக இருக்க காரணம் - பச்சையம்

வயிற்றில் சுரக்கும் இரப்பை நீரில் அடங்கியது - அமிலம்

வளிமண்டல தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியலின் பிரிவு - வானிலை ஆராய்ச்சி

நரம்பியலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியல் பிரிவு - நியூராலஜி

மிக எளிதில் பற்றாத வாயு - நைட்ரஜன்

நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள் - குரோமியம்

மந்த வாயுக்களை கண்டுபிடித்தவர் - ராம்சே

மனித உடலின் சராசரி வெப்பநிலை - 36.9 சி

உடல் வெப்பநிலை எதனால் சரி செய்யப்படுகிறது - மூளையின் ஒரு பகுதி.

வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் – நோபல்

ஆதாரம் : தினமணி கல்வி வழிகாட்டி