டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் – ஆல்பா சென்டாரி

சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் - 8 நிமிடம் 20 வினாடி

வானியல் தொலைவிற்கான அலகு - ஒளி ஆண்டு

அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் - சனி

மிக வேகமாக சுழலக் கூடிய கோள் - வியாழன்

வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாய் - நைட்ரஜன்

மின்கலத்தை கண்டு பிடித்தவர் - அலெக்சாண்டரோ வோல்டோ

மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922

இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை - 13

அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்

ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து

மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா

அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக இருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)

இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி

இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்

உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது

ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்

ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750

சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா

சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்

'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்

தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி

இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி

'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி

1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்

சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி

நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்

ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்

முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - விவசாயம்

இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - வறுமை ஒழிப்பு

ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969

'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்

தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013

'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா

உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981

உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்

தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 2005

உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19

உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்

யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)

மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்

நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்

சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி

76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்

நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976

'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்

ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனம் - பஞ்சாப் பல்கலைக்கழகம் (லாகூர்)

இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - பன்னா (மத்தியப்பிரதேசம்)

ஆதாரம் : மனித நேய அறக்கட்டளை